/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
டி.என்.பி.எல்., கிரிக்கெட் அணிக்கு குருநானக் கல்லுாரி மாணவர் தேர்வு

ADDED : பிப் 15, 2025 08:53 PM

திருநெல்வேலி,:திருநெல்வேலி என்.ஜி.ஓ., காலனியைச் சேர்ந்த கிருஷ்ணமோகன் மகன் ஜெயந்த் 19; சென்னை குருநானக் கல்லுாரியில் இளங்கலை பயில்கிறார்.
இவர், சமீபத்தில் குஜராதில் நடந்த கிரிக்கெட் போட்டியில், தமிழக அணியில் இடம்பெற்று விளையாடினார்.
மொத்தம் 91 ரன்கள் எடுத்து, அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்தார். அந்த போட்டியின் ஆட்டநாயகனாவும் தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில், தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில், அணிகளுக்கான வீரர்கள் தேர்வு, சென்னை சேப்பாக்கத்தில் நேற்று நடந்தது.
இதில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு 1.15 லட்சம் ரூபாய் ஏலத்தில் ஜெயந்த் தேர்வாகி உள்ளார்.