ADDED : ஆக 19, 2026 11:11 PM
அ நிறம் | அளவு
திருநெல்வேலி: திருநெல்வேலி நெல்லையப்பர் ரத வீதியில் தி.க., மாநாட்டை நிறுத்தக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட ஹிந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டனர்.
திருநெல்வேலி டவுன் நெல்லையப்பர் ரத வீதியில் தி.க., தலைவர் வீரமணி தலைமையில் மாநாடு நடந்தது. கோயில் ரதவீதியில் இந்து எதிர்ப்பு மாநாடு நடத்துவதற்கு ஹிந்து முன்னணியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். மாநில செயலாளர் கா. குற்றாலநாதன் தலைமையில் நிர்வாகிகள் மாநாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.
