/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
அரசு டாக்டரை கைது செய்ய ஹிந்து அமைப்பு போராட்டம்
/
அரசு டாக்டரை கைது செய்ய ஹிந்து அமைப்பு போராட்டம்
ADDED : நவ 07, 2025 11:55 PM

திருநெல்வேலி: ஊழியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசு டாக்டரை கைது செய்யக்கோரி, ஹிந்து அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருநெல்வேலி மாவட்டம், களக்காட்டில் டாக்டர் மைதீன் தனியார் மருத்துவமனை நடத்துகிறார். இவரது மகன் நஸீர் கூடங்குளம் இ.எஸ்.ஐ., அரசு மருத்துவமனையில் டாக்டராக பணிபுரிகிறார். குடும்பத்தினர் நடத்தும் மருத்துவமனையிலும் நோயாளி களுக்கு சிகிச்சை அளிப்பார். அவரது மனைவி தஸ்லீமாவும் அங்கு டாக்டராக பணிபுரிகிறார்.
சில நாட்களுக்கு முன் மருத்துவமனையில் பணியாற்றும் பெண் ஊழியர் ஒருவர், நஸீர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போலீசில் புகார் செய்தார். போலீசார், நஸீர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
இதற்கிடையே தலைமறைவான நஸீரை கைது செய்ய வலியுறுத்தி, நேற்று களக்காட்டில் ஹிந்து அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

