/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
ஆப்பரேஷனில் பெண் பாதிப்பு ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்க மருத்துவமனைக்கு உத்தரவு

ADDED : ஆக 17, 2025 02:19 AM
திருநெல்வேலி:பேறுகால சிகிச்சையின் போது, குறைபாடான சிகிச்சை அளித்த தனியார் மருத்துவமனை, 3 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க நுகர்வோர் ஆணையம் உத்தர விட்டது.
தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம், எழில்நகரை சேர்ந்த தாமோதரன் என்பவர் மனைவி ரம்யா, 24. பிரசவத்திற்காக சுரண்டையில் உள்ள பொன்ரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கே அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறைபாடால், பாதிப்பு ஏற்பட்டது.
இதற்காக மீண்டும் பரிசோதனைகள், அறுவை சிகிச்சைகள் நடந்தன. அதிக செலவு ஏற்பட்டது.
எனவே, இது குறித்து வழக்கறிஞர் பிரம்மா மூலம் ரம்யா, திருநெல்வேலி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.
ஆணைய தலைவர் பிறவி பெருமாள் மற்றும் உறுப்பினர் சண்முகப்பிரியா ஆகியோர் விசாரித்து, பாதிக்கப்பட்ட நோயாளி ரம்யாவுக்கு, 3 லட்சம் ரூபாய் இழப்பீடும், வழக்குச்செலவு 10,000 ரூபாயும் வழங்கும் படி, பொன்ரா மருத்துவமனையின் டாக்டர் காசிராணிக்கு உத்தரவிட்டனர்.