/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
மாவட்ட வருவாய் அலுவலர் என பண மோசடி ஏட்டு, ஓசூர் பெண் கைது
/
மாவட்ட வருவாய் அலுவலர் என பண மோசடி ஏட்டு, ஓசூர் பெண் கைது
மாவட்ட வருவாய் அலுவலர் என பண மோசடி ஏட்டு, ஓசூர் பெண் கைது
மாவட்ட வருவாய் அலுவலர் என பண மோசடி ஏட்டு, ஓசூர் பெண் கைது
ADDED : அக் 06, 2024 07:37 AM

திருநெல்வேலி: மாவட்ட வருவாய் அலுவலர் என கூறி பலரிடம் லட்சக்கணக்கில் பணம் மோசடி செய்த ஓசூரை சேர்ந்த பெண்ணும், திருநெல்வேலி மாநகர போலீஸ் ஏட்டும் கைது செய்யப்பட்டனர்.
திருநெல்வேலி ஜங்ஷன் போலீஸ் ஸ்டேஷனில் ஏட்டாக பணிபுரிபவர் முருகராஜ், 41. தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூரை சேர்ந்தவர். இவருக்கும் ஓசூரை சேர்ந்த வளர்மதி, 42, என்ற பெண்ணுக்கும் தொடர்பு ஏற்பட்டது.
வளர்மதி, திருநெல்வேலி மாவட்ட வருவாய் அலுவலர் (டிஆர்ஓ) ஆக பணிபுரிகிறார் என கூறி பலரிடமும் மோசடி செய்தார். மதுரை மாவட்டம் ஒத்தக்கடையை சேர்ந்த சசிகுமார் என்பவருக்கு நிலப்பட்டா வாங்கி தருவதாக கூறி ரூ 10 லட்சம் பெற்றுள்ளார். பட்டா வாங்கித் தரவில்லை பணமும் திரும்ப தராததால் சசிகுமார் முருகராஜிடம் கேட்டார். முருகராஜ் காசோலை கொடுத்தார். வங்கி கணக்கில் பணம் இல்லாததால் காசோலை திரும்பியது.
எனவே முருகராஜிடம் சசிக்குமார் பணம் கேட்டார். பணம் தராததால் திருநெல்வேலியில் ஜங்ஷன் போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தார். அதன்பேரில் முருகராஜ், வளர்மதி இருவரையும் போலீசார் கைது செய்தனர்.