ADDED : ஏப் 12, 2025 01:06 AM
திருநெல்வேலி,
திருநெல்வேலி அருகே இலங்கை அகதிகள் முகாமில், கணவன், மனைவி தற்கொலை செய்து கொண்டனர்.
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே சமூகரெங்கபுரம் இலங்கை அகதிகள் முகாமில் வசிப்பவர் தியாகராஜன் மகள் கீதா, 23. இவருக்கும் திருச்சி, கொட்டாம்பட்டி இலங்கை அகதிகள் முகாமில் வசிக்கும் உறவினர் நந்தகுமார், 29, என்பவருக்கும், நான்கு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.
நந்தகுமாருக்கு குடிப்பழக்கம் இருந்தது. குழந்தை இல்லாததால் கீதா, சமூகரெங்கபுரம் பெற்றோர் வீட்டுக்கு வந்து விட்டார். மூன்று ஆண்டுகளாக, நந்தகுமார் சமூகரெங்கபுரம் வந்து செல்வார். அவரது குடிப்பழக்கத்தால் நேற்று முன்தினம் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.
மனமுடைந்த கீதா வீட்டில் இருந்த ஹேர் ஆயில் தைலத்தை குடித்து, தற்கொலைக்கு முயன்றார். மயங்கிய நிலையில் நாகர்கோவில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு அவர் இறந்தார்.
மனைவி இறந்ததால் விரக்தியடைந்த நந்தகுமார், வீட்டு அருகே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இருவருக்கும் திருமணமாகி நான்கு ஆண்டுகளே ஆவதால் இறப்பு குறித்து கோட்டாட்சியர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
