தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/ அகதிகள் முகாமில் கணவன் மனைவி தற்கொலை

அகதிகள் முகாமில் கணவன் மனைவி தற்கொலை

அகதிகள் முகாமில் கணவன் மனைவி தற்கொலை


ADDED : ஏப் 12, 2025 02:21 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 12, 2025 02:21 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருநெல்வேலி:திருநெல்வேலி அருகே இலங்கை அகதிகள் முகாமில் குடும்ப பிரச்னையில் கணவன், மனைவி தற்கொலை செய்து கொண்டனர்.

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே சமூகரெங்கபுரம்

இலங்கை அகதிகள் முகாமில் வசிப்பவர் தியாகராஜன். மகள் கீதா 23.

இவருக்கும் திருச்சி, கொட்டாம்பட்டி இலங்கை அகதிகள் முகாமில் வசிக்கும் உறவினர் நந்தகுமார் 29, என்பவருக்கும் 4 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. ஒரு ஆண்டு மட்டுமே அங்கு சேர்ந்து வாழ்ந்தனர். நந்தகுமாருக்கு குடிப்பழக்கம் இருந்தது. குழந்தை இல்லாததால் கீதா, சமூகரெங்கபுரம் பெற்றோர் வீட்டுக்கு வந்து விட்டார். மூன்று ஆண்டுகளாக நந்தகுமார் அடிக்கடி சமூகரெங்கபுரம் வந்து செல்வார்.

அவரது குடிப்பழக்கத்தால் நேற்று முன்தினம் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த கீதா வீட்டில் இருந்த ஹேர் ஆயில் தைலத்தை குடித்துவிட்டார். மயங்கிய நிலையில் நாகர்கோவில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்தார். மனைவி இறந்ததால் விரக்தியடைந்த நந்தகுமார் வீட்டு அருகே தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். ராதாபுரம் போலீசார் விசாரித்தனர்.

திருமணம் நடந்து 4 ஆண்டுகளே ஆவதால் இறப்பு குறித்து கோட்டாட்சியர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us