/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
வீட்டிலேயே மனைவிக்கு பிரசவம் பார்த்தபோது இறந்து பிறந்த ஆண் சிசு உடலை புதைத்த கணவர் கைது
/
வீட்டிலேயே மனைவிக்கு பிரசவம் பார்த்தபோது இறந்து பிறந்த ஆண் சிசு உடலை புதைத்த கணவர் கைது
வீட்டிலேயே மனைவிக்கு பிரசவம் பார்த்தபோது இறந்து பிறந்த ஆண் சிசு உடலை புதைத்த கணவர் கைது
வீட்டிலேயே மனைவிக்கு பிரசவம் பார்த்தபோது இறந்து பிறந்த ஆண் சிசு உடலை புதைத்த கணவர் கைது
ADDED : பிப் 08, 2026 07:51 AM

திருநெல்வேலி: திருநெல்வேலியில் வீட்டிலேயே மனைவிக்கு சுயபிரசவம் பார்த்ததில் ஆண் சிசு இறந்தே பிறந்த நிலையில் உடல் புதைக்கப்பட்டது. கணவரை போலீசார் கைது செய்தனர்.
திருநெல்வேலி மேலப்பாளையம் தெற்கு தைக்கா தெருவைச் சேர்ந்தவர் நசீம் உசேன் 35. எம்.எஸ்.சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்துள்ள இவர் கோவையில் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி முகமது அஸ்மா 27. இவர்களுக்கு 2020ல் திருமணம் நடந்தது. குழந்தையில்லை.
நிறைமாத கர்ப்பிணியாக இருந்த முகமது அஸ்மாவுக்கு நேற்று முன்தினம் திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் நசீம் உசேன் தனது வீட்டிலேயே இயற்கை முறையில் பிரசவம் பார்த்தார். அப்போது இறந்த நிலையிலேயே ஆண் குழந்தை பிறந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் யாருக்கும் தெரிவிக்காமல் இரவோடு இரவாக சிசு உடலை புதைத்தார்.
இதுபற்றி நேற்று காலை அப்பகுதி மக்கள் மேலப்பாளையம் போலீசாருக்கு தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் செந்தில் தங்கதுரை தலைமையிலான போலீசார் விசாரித்தனர்.
அதில் மருத்துவ உதவியின்றி வீட்டிலேயே பிரசவம் பார்த்ததும் இறந்த சிசு உடலை மறைத்து புதைத்ததும் உறுதியானது. நசீம் உசேன் கைது செய்யப்பட்டார். இவ்வழக்கில் அவருக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
டாக்டர்களின் அறிவுரையை மீறிய தம்பதி முகமது அஸ்மா கர்ப்பமாக இருப்பதை அறிந்த சுகாதாரத்துறை ஊழியர்கள் மாதாந்திர பரிசோதனைக்காக அவரை அரசு மருத்துவமனைக்கு வருமாறு அறிவுறுத்தினர். ஆனால் அவர் அதற்கு மறுத்துள்ளார்.
மாநகராட்சி நல அலுவலர் டாக்டர் ராணி மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் நேரில் சென்று மருத்துவமனைக்கு வருமாறு வலியுறுத்தியபோது, 'இந்திய அரசியலமைப்பு சாசனத்தின் படி ஆங்கில மருத்துவத்தை மறுக்கவும், தடுப்பூசி வேண்டாம் என்றும் கூறவும் எங்களுக்கு உரிமை உள்ளது; இயற்கை பிரசவத்தில் ஏற்படும் விளைவுகளுக்கு நாங்களே பொறுப்பு' எனக் கூறி முகமது அஸ்மா ஜன.,8ல் எழுத்துப்பூர்வமாக கடிதம் வழங்கியுள்ளார்.
அவருக்கு ஏற்கனவே இரண்டு முறை கரு கலைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

