/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
நகைக்காக மனைவியை கொன்று கிணற்றில் வீசிய கணவர் கைது
/
நகைக்காக மனைவியை கொன்று கிணற்றில் வீசிய கணவர் கைது
நகைக்காக மனைவியை கொன்று கிணற்றில் வீசிய கணவர் கைது
நகைக்காக மனைவியை கொன்று கிணற்றில் வீசிய கணவர் கைது
ADDED : ஜன 27, 2026 05:27 AM

மானுார்: திருநெல்வேலி மாவட்டம், மானுார், குப்பனாபுரத்தை சேர்ந்தவர் அந்தோணி, 24. ராமையன்பட்டியில் அரசு கால்நடை மருத்துவ கல்லுாரி தற்காலிக ஊழியர். இவருக்கும் மேல இலந்தைகுளத்தை சேர்ந்த பாக்கியம், 23, என்பவருக்கும், எட்டு மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. அந்தோணி குடும்ப செலவுக்காக, பாக்கியத்திடம் அவரது, 10 சவரன் நகைகளை தருமாறு கேட்டதில், இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.
இந்நிலையில், நேற்று முன்தினம் அந்தோணி, பாக்கியத்தை தோட்டத்துக்கு அழைத்து சென்று, அவரை கழுத்தை நெரித்து கொலை செய்து, உடலை கிணற்றில் வீசினார்.
மானுார் போலீசார் விசாரித்தனர். அதில், அந்தோணி, பாக்கியத்தை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து, போலீசார் நேற்று அந்தோணியை கைது செய்தனர்.