sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

 மனைவியை- கொலை செய்து கிணற்றில் வீசிய கணவர் கைது

/

 மனைவியை- கொலை செய்து கிணற்றில் வீசிய கணவர் கைது

 மனைவியை- கொலை செய்து கிணற்றில் வீசிய கணவர் கைது

 மனைவியை- கொலை செய்து கிணற்றில் வீசிய கணவர் கைது

1


ADDED : ஜன 27, 2026 05:31 AM

Google News

ADDED : ஜன 27, 2026 05:31 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி: நகையை கேட்டு தராத மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்து உடலை கிணற்றில் வீசிய கணவர் கைது செய்யப்பட்டார்.

திருநெல்வேலி மாவட்டம் மானுார் அருகே குப்பனாபுரத்தை சேர்ந்தவர் அந்தோணி 24. ராமையன்பட்டியில் உள்ள அரசு கால்நடை மருத்துவக் கல்லுாரி தற்காலிக ஊழியர்.

இவருக்கும் மேல இலந்தை குளத்தை சேர்ந்த பாக்கியம் 23, என்பவருக்கும் எட்டு மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. அந்தோணி குடும்ப செலவுக்காக பாக்கியத்திடம் அவரது 10 பவுன் நகைகளை தருமாறு கேட்டார்.

இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. நேற்று முன்தினம் பாக்கியம் வீட்டில் இருந்தபோது தோட்டத்து வேலைக்கு வருமாறு அவரை அந்தோணி அழைத்தார்.

அந்தோணியின் குடும்ப தோட்டத்திற்கு பாக்கியம் வந்தபோது அவரிடம் தகராறு செய்து அவரை கழுத்தை நெரித்து கொலை செய்து உடலை கிணற்றில் வீசினார்.

பின்னர் அந்தோணி, தனது தாயாரிடம் கூறி மருமகளை காணவில்லை என மானுார் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்க கூறினார். மருமகளை காணவில்லை என மாமியார் அளித்த புகாரை போலீசார் விசாரித்தனர். கிணற்றில் பாக்கியத்தின் உடலை கண்டு பிடித்தனர். பாக்கியத்தின் அண்ணன், தங்கை இறப்பில் மர்மம் இருப்பதாக கூறி புகார் அளித்தார்.

மானுார் போலீசார் பாக்கியத்தின் கணவன் அந்தோணியை அழைத்து விசாரித்த போது அவர் மனைவியிடம் கோபப்பட்டு தாக்கி கழுத்தை நெரித்து கொலை செய்து உடலை கிணற்றில் வீசியதை ஒப்புக்கொண்டார். அவர் மீது போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us