ADDED : ஆக 07, 2024 10:39 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநெல்வேலி:திருநெல்வேலி மேலப்பாளையம் பீடி காலனியில் வசிப்பவர் செல்வகுமார் 47, வெல்டிங் தொழிலாளி. இவரது மனைவி மாரியம்மாள் 42. இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.
செல்வகுமார் அதே பகுதியில் புதிதாக வீடு கட்டி வந்தார். வீடு கட்டுவதற்கு மாரியம்மாளின் நகைகளை அடகு வைத்து செலவு செய்தார். மாரியம்மாள் தமது நகைகளை மீட்டுத் தரும்படி கணவனிடம் கேட்டதால் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. நேற்று பகலில் வீட்டில் இருந்த போது ஏற்பட்ட தகராறில் மனைவியின் கழுத்தில் கத்தியால் குத்தியுள்ளார். அவரது மகன் தாயாரை மீட்டு 108 வாகனத்தில் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். செல்லும் வழியில் மாரியம்மாள் இறந்தார். மேலப்பாளையம் போலீசார் செல்வக்குமாரை கைது செய்தனர்.