/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
நடத்தை சந்தேகத்தில் மனைவி கொலை கணவர் போலீசில் சரண்
/
நடத்தை சந்தேகத்தில் மனைவி கொலை கணவர் போலீசில் சரண்
நடத்தை சந்தேகத்தில் மனைவி கொலை கணவர் போலீசில் சரண்
நடத்தை சந்தேகத்தில் மனைவி கொலை கணவர் போலீசில் சரண்
ADDED : ஜன 19, 2025 02:33 AM
திருநெல்வேலி,:நீண்ட நேரம் அலைபேசியில் பேசிக்கொண்டிருந்த மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட கணவர் வெட்டிக் கொலை செய்தார்.
திருநெல்வேலி அருகே முன்னீர்பள்ளம் கீழச்செவல் நயினார்குளத்தை சேர்ந்தவர் பலவேசம் 37. விவசாயி. மனைவி தமிழரசி 31. 9 வயதில் இஷாந்த், 7 வயதில் அசோக் என்ற மகன்கள் உள்ளனர். தமிழரசி திருநெல்வேலியில் உள்ள நகைக்கடையில் வேலை பார்த்தார்.
தமிழரசி அடிக்கடி அலைபேசியில் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்து பலவேசம் கண்டித்தார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
நேற்று முன்தினம் வேலைக்கு சென்று வந்த தமிழரசி நீண்ட நேரம் அலைபேசியில் பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்த பலவேசம், இரவில் துாங்கிக் கொண்டிருந்த மனைவியை அரிவாளால் வெட்டிக் கொலை செய்தார்.
பின்னர் அரிவாளுடன் முன்னீர்பள்ளம் போலீசில் சரண்டைந்தார்.