தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/தீப விவகாரத்தை என்னிடம் கொடுத்திருந்தால் அரை மணி நேரத்தில் தீர்வு கண்டிருப்பேன்: சொல்கிறார் சீமான்

தீப விவகாரத்தை என்னிடம் கொடுத்திருந்தால் அரை மணி நேரத்தில் தீர்வு கண்டிருப்பேன்: சொல்கிறார் சீமான்

தீப விவகாரத்தை என்னிடம் கொடுத்திருந்தால் அரை மணி நேரத்தில் தீர்வு கண்டிருப்பேன்: சொல்கிறார் சீமான்


UPDATED : நவ 26, 2026 06:55 PM

ADDED : நவ 26, 2026 06:55 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 26, 2026 06:55 PM ADDED : நவ 26, 2026 06:55 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருநெல்வேலி: “திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தை என்னிடம் கொடுத்திருந்தால் அரை மணி நேரத்தில் தீர்வு கண்டிருப்பேன். பிரச்னையின் வேரைக் கண்டறிந்து தீர்வு காண ஆட்சியாளர்களுக்குத் தெரியவில்லை,” என நா.த., கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார்.

திருநெல்வேலியில் நடந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: தமிழ் எழுத, படிக்க, பேசத்தெரியாத தலைமுறைகள் உருவாகி வருகின்றன. தாய்மொழியை மறந்ததால் இனப்பற்றும் குறைந்து வருகிறது. நாட்டை ஆள்பவர்களுக்கே தமிழ் பேசத் தெரியவில்லை. மேகதாதுவில் அணை கட்டியே தீருவேன் என கர்நாடக முதல்வர் கூறுகிறார். அதற்கான கல், மண் உள்ளிட்ட கனிமவளங்கள் தமிழகத்தில் இருந்துதான் செல்லும். இதைத் தடுக்க தமிழக அரசுக்கு திறனில்லை. கர்நாடக முதல்வர் அணை கட்டுவதாகக் கூறும்போது, தமிழக முதல்வர் அவரது தோளில் கைபோட்டு புகைப்படம் எடுக்கிறார்.

திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தை என்னிடம் கொடுத்திருந்தால் அரை மணி நேரத்தில் தீர்வு கண்டிருப்பேன். பிரச்னையின் வேரைக் கண்டறிந்து தீர்வு காண ஆட்சியாளர்களுக்குத் தெரியவில்லை.

த.வெ.க.,வை விமர்சித்தால் தி.மு.க.,விடம் பணம் வாங்கிவிட்டதாகக் கூறுகின்றனர். பதவி ஆசையும், பண ஆசையும் இருந்திருந்தால் எப்போதோ கூட்டணிக்குச் சென்று எம்.எல்.ஏ., ஆகியிருப்பேன்.

அம்பாசமுத்திரம் தொகுதியில் என்னை வெற்றிபெற விடக்கூடாது என நினைத்து பல்வேறு பணிகளை மேற்கொள்கின்றனர். முதல்வர் விஜய் இந்த தொகுதியில்தான் பல்வேறு திட்டங்களை தொடங்க உள்ளார். இசக்கி சுப்பையா என்னிடம் கூட்டணிக்கு வருமாறு பேச்சுவார்த்தை நடத்தினார். பதவி ஆசை இருந்திருந்தால் அப்போதே கூட்டணிக்குச் சென்றிருப்பேன். எனது மனைவியிடமும் கூட்டணி குறித்து பேசினர். அவரும் கூட்டணி வேண்டாம் எனக்கூறி அனுப்பிவிட்டார். அம்பாசமுத்திரம் தொகுதியில் பணமும், அதிகாரமும் கடுமையாக வேலை செய்யும். இருப்பினும் அந்த தொகுதியை வென்று சிறந்த தொகுதியாக மாற்றுவோம் என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us