/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
திருநெல்வேலி பீடி நிறுவனத்தில் வருமானவரித்துறை சோதனை
/
திருநெல்வேலி பீடி நிறுவனத்தில் வருமானவரித்துறை சோதனை
திருநெல்வேலி பீடி நிறுவனத்தில் வருமானவரித்துறை சோதனை
திருநெல்வேலி பீடி நிறுவனத்தில் வருமானவரித்துறை சோதனை
ADDED : ஏப் 30, 2025 07:08 AM

திருநெல்வேலி :  திருநெல்வேலி டவுனில்  20 ஆண்டுகளுக்கு மேலாக காஜா பீடி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. 200 க்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர். இங்கு தயாரிக்கப்படும் பீடி கேரளாவில் அதிகமாக விற்பனையாகிறது.
இந்நிலையில் நேற்று மதியம் 12:15 மணிக்கு இங்கு 2  கார்களில் வந்த 10 பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். பணியாளர்கள் மற்றும் நிர்வாகத்திடம்  விசாரணை நடந்தது.
கதவுகள் மூடப்பட்டு யாரும் வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை. முதற்கட்டமாக 8 அலைபேசிகள்  பறிமுதல் செய்யப்பட்டன. ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடந்த சோதனை எதற்காக, ஆவணங்கள் பறிமுதல் செய்த விபரம் குறித்து அதிகாரிகள் தெரிவிக்கவில்லை.