/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
சுகாதாரச்சான்றிதழ் வழங்கியதில் முறைகேடு; திருநெல்வேலி மாநகராட்சியில் சர்ச்சை
/
சுகாதாரச்சான்றிதழ் வழங்கியதில் முறைகேடு; திருநெல்வேலி மாநகராட்சியில் சர்ச்சை
சுகாதாரச்சான்றிதழ் வழங்கியதில் முறைகேடு; திருநெல்வேலி மாநகராட்சியில் சர்ச்சை
சுகாதாரச்சான்றிதழ் வழங்கியதில் முறைகேடு; திருநெல்வேலி மாநகராட்சியில் சர்ச்சை
ADDED : மார் 29, 2025 06:41 AM

திருநெல்வேலி; திருநெல்வேலி மாநகராட்சியில் கட்-டட அனுமதி உட்பட பல்வேறு அனுமதிகள் பெறாத தனியார் மருத்துவமனைகளுக்கு முறையான ஆய்வின்றி சுகாதாரச்சான்றிதழ்கள் வழங்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இம்மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் 100க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகள் உள்ளன. இவற்றில் முறையான கட்டட அனுமதி, தீயணைப்புத்துறை தடையில்லா சான்று, பயோ மெடிக்கல் கழிவுகளை கையாளும் சான்று போன்ற முன் அனுமதி இல்லாத 20 தனியார் மருத்துவமனைகளுக்கு திருநெல்வேலி மாநகராட்சி ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பியது. மேலும் மாநகராட்சி நகர் நல அலுவலராக பணிபுரிந்த சரோஜா இத்தகைய அனுமதி இல்லாத மருத்துவமனைகளின் பட்டியலை அலுவலகத்தில் வெளியிட்டார். அவர் திருநெல்வேலியில் இருந்து சிவகாசி மாநகராட்சிக்கு மாறுதலில் சென்ற பிறகு, திருநெல்வேலியில் அனுமதி இல்லாத அனைத்து மருத்துவமனைகளுக்கும் ஆய்வின்றி சானிட்டரி சர்டிபிகேட் வழங்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
2024 ஜூன் முதல் நவ., வரை 6 மாதங்களில் மட்டும் 28 தனியார் மருத்துவமனைகளுக்கு சுகாதார சான்றிதழ் வழங்கப்பட்டு உள்ளதாக பெர்டின் ராயன் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்டு பெற்ற புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
திருநெல்வேலி மாநகராட்சி அதிகாரிகளே தனியார் மருத்துவமனைகளுக்கு எதிராக ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தும், நோட்டீஸ் அனுப்பியும் நடவடிக்கை எடுத்த நிலையில் தற்போது மாநகராட்சி நிர்வாகமே அனைத்து மருத்துவமனைகளுக்கும் சுகாதார சான்றிதழ் வழங்கியது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. மாநகராட்சி கமிஷனர் சுகபுத்ராவிடம் கேட்டபோது பதில் அளிக்காமல் மவுனம் காத்தார்.