/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
பழனிசாமியை ஆட்சியில் அமர்த்துவது நம் கடமை அண்ணாமலை பேச்சு
/
பழனிசாமியை ஆட்சியில் அமர்த்துவது நம் கடமை அண்ணாமலை பேச்சு
பழனிசாமியை ஆட்சியில் அமர்த்துவது நம் கடமை அண்ணாமலை பேச்சு
பழனிசாமியை ஆட்சியில் அமர்த்துவது நம் கடமை அண்ணாமலை பேச்சு
ADDED : ஆக 22, 2025 11:26 PM
திருநெல்வேலி:திருநெல்வேலியில் நடந்த பா.ஜ.,பூத் கமிட்டி கூட்டத்தில் பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை பேசியதாவது:
போர் என்று வரும்போது படைத் தளபதிகள் தான் முன்னால் இருப்பார்கள். பா.ஜ.,வை பொறுத்தவரை பூத் பொறுப்பாளர்கள் தான் முன்னணியில் இருப்பவர்கள்.
அடுத்த 8 மாத காலம் நாம் கடுமையாக உழைக்க வேண்டும்.
பழனிச்சாமியை ஆட்சிப் பொறுப்பில் அமர்த்த வேண்டிய பொறுப்பு நம் கூட்டணிக்கு உள்ளது.
இந்த அரசுக்கு எதிராக போராடி பலரும் சிறைக்கு சென்றுள்ளோம்.
முதல்வர் ஸ்டாலினுக்கு எதைப் பார்த்தாலும் பயம். ஆர்ட்டிகள் 370 ஐ பார்த்தால் பயம், புதிய கல்விக் கொள்கையால் பயம், 130 ஆவது சட்ட திருத்தம் ஏற்றுக் கொண்டுவரப்பட்டது. இதற்கு முதல்வருக்கு பயம்.
எதற்கெடுத்தாலும் பயப்படும் முதல்வரை வீட்டுக்கு அனுப்ப வேண்டிய கடமை நமக்கு உள்ளது.
2026ல் ஒரு நல்லாட்சியை ஏற்படுத்த வேண்டும். சென்னையில் நடக்கும் கடைசி பூத் கமிட்டி மாநாட்டில் 10 லட்சம் பேர் பங்கேற்க வேண்டும்.
இவ்வாறு அண்ணாமலை பேசினார்