/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
முகவரி கேட்பது போல மூதாட்டியிடம் நகை பறிப்பு
/
முகவரி கேட்பது போல மூதாட்டியிடம் நகை பறிப்பு
ADDED : நவ 07, 2024 02:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநெல்வேலி:திருநெல்வேலி தச்சநல்லூர் உடையார்பட்டி இருதய நகர் பகுதியை சேர்ந்தவர் மணிமாலா 65. ஓய்வு பெற்ற தபால் துறை ஊழியர். வீட்டிலிருந்து கடைக்கு நடந்து சென்றார்.
அப்போது அவரிடம் டூவீலரில் வந்த இரு வாலிபர்கள் முகவரி கேட்பது போல பேச்சு கொடுத்தனர். பேசிக் கொண்டிருந்தபோதே இருவரும் மணிமாலா கழுத்தில் இருந்த 10 பவுன் தங்க செயினை பறித்துக் கொண்டு தப்பினர்.
சிசிடிவி கேமரா காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரிக்கின்றனர்.