/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
ஒரே நேரத்தில் இரு கைகளாலும் எழுதும் பெண்ணுக்கு பாராட்டு
/
ஒரே நேரத்தில் இரு கைகளாலும் எழுதும் பெண்ணுக்கு பாராட்டு
ஒரே நேரத்தில் இரு கைகளாலும் எழுதும் பெண்ணுக்கு பாராட்டு
ஒரே நேரத்தில் இரு கைகளாலும் எழுதும் பெண்ணுக்கு பாராட்டு
ADDED : செப் 26, 2024 03:02 AM

திருநெல்வேலியைச் சேர்ந்தவர் சாந்தா சர்மிளா.இவர், ஐந்து நிமிடங்களில், ஒரே நேரத்தில் இரண்டு கைகளாலும், 12 திருக்குறளை எழுதி, சாதனை படைத்துள்ளார். இதை பாராட்டி 'இந்தியா புக் ஆப் ரிக்கார்ட்ஸ்' சான்றிதழ் வழங்கி உள்ளது.
அதேபோல் ஒரு நிமிடத்தில், 14 கண்ணாடி பிரதிபலிப்பு தமிழ் எழுத்துக்களை, இரண்டு கைகளாலும் ஒரே நேரத்தில் எழுதி சாதனை படைத்ததற்காக, 'இன்டர்நேஷனல் புக் ஆப் ரிக்கார்ட்ஸ்' சான்றிதழ் வழங்கி உள்ளது. இவற்றை நேற்று முதல்வரிடம் காண்பித்து, வாழ்த்து பெற்றார்.
இதுகுறித்து, அவர் கூறியதாவது:
கொரோனா காலத்தில், இடது கையில் எழுதப் பழகினேன். ஓராண்டில் இரண்டு கைகளிலும், ஒரே நேரத்தில் எழுதப் பழகினேன். தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதப் பழகி உள்ளேன். அடுத்து ஒரு கையில் தமிழிலும், மற்றொரு கையில் ஆங்கிலத்திலும் எழுத பயிற்சி பெற்று வருகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -