/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
இரட்டை கொலை நால்வருக்கு 'குண்டாஸ்'
/
இரட்டை கொலை நால்வருக்கு 'குண்டாஸ்'
ADDED : செப் 19, 2024 02:09 AM
திருநெல்வேலி:கோவில் கொடை விழாவில் நடந்த இரட்டை கொலையில் பெண் உட்பட நான்கு பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை அருகே அப்புவிளை, காரம்பாடு பகுதியில் ஆக., 17ல் கோவில் கொடை விழா நடந்தது. அப்போது ஒரே சமூகத்தினர் இடையே மோதல் ஏற்பட்டது.
இதில் சகோதரர்கள் மதியழகன், 43, மதிராஜன், 37, ஆகியோர் குத்திக் கொலை செய்யப்பட்டனர். இது தொடர்பாக, அதே பகுதியைச் சேர்ந்த எட்டு பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இதில், கைதான ராஜ்குமார், 28, அவரது மனைவி திவ்யா, 26, லெவன்குமார், 26, அருண்குமார், 20 ஆகிய நான்கு பேர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது. திவ்யா மதுரை பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.