/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
மனிதக்கழிவு கொட்டிய லாரி டிரைவர் கிளீனர் கைது
/
மனிதக்கழிவு கொட்டிய லாரி டிரைவர் கிளீனர் கைது
ADDED : ஜன 30, 2025 02:37 AM

திருநெல்வேலி:திருநெல்வேலியில் செப்டிக் டேங்க் லாரி மூலம் மனிதக் கழிவுகளைக் பொது இடத்தில் கொட்டிய டிரைவர், கிளீனர் கைது செய்யப்பட்டனர்.
திருநெல்வேலி அருகே திருவேங்கடநாதபுரம், மேல குன்னத்துார் பொத்தை பகுதியில் இரவில் செப்டிக் டேங்க் கிளீனிங் லாரிகளில் கொண்டு வந்து மனித கழிவுகளை கொட்டுவது தொடர்ந்து நடந்தது.
இதனால் அங்கு துர்நாற்றம் வீசியது. அங்கு கழிவுகள் கொட்டப்படுவதை அறிந்த அத்திமேடு மக்கள், கழிவு லாரியை முற்றுகையிட்டு போலீசில் புகார் செய்தனர்.
லாரி டிரைவர் கொண்டாநகரம் தெய்வக்குமார் 26, கிளீனர் ஜெயகாந்தி 24, ஆகியோரை சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சுத்தமல்லி போலீசார் கைது செய்தனர்.

