/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
பெண் எஸ்.ஐ.,யை கத்தியால் குத்தியவருக்கு 5 ஆண்டு சிறை
/
பெண் எஸ்.ஐ.,யை கத்தியால் குத்தியவருக்கு 5 ஆண்டு சிறை
பெண் எஸ்.ஐ.,யை கத்தியால் குத்தியவருக்கு 5 ஆண்டு சிறை
பெண் எஸ்.ஐ.,யை கத்தியால் குத்தியவருக்கு 5 ஆண்டு சிறை
ADDED : ஏப் 29, 2025 07:10 AM

திருநெல்வேலி:  கோயில் கொடை விழாவில் பாதுகாப்பிற்கு வந்த பெண் எஸ்.ஐ.,யை கத்தியால் குத்தியவருக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து மகிளா கோர்ட் உத்தரவிட்டது.
திருநெல்வேலி அருகே சுத்தமல்லி போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.ஐ.,ஆக இருந்தவர் மார்க்ரெட் 31. 2022 ஏப்., 23ல் பழவூரில் நடந்த கோயில் கொடை விழாவிற்கு இரவில் பாதுகாப்பிற்கு மார்க்ரெட் சென்றிருந்தார்.
அங்கு வந்த ஆறுமுகம் என்ற படையப்பா 44, தன் மீது எஸ்.ஐ., ஏற்கனவே வாகன விதிமீறல் வழக்கு பதிவு செய்து அபராதம் விதித்ததற்காக விரோதத்தில் இருந்தார். அவர் கோயில் கொடையின் போது எஸ்.ஐ.,யை கத்தியால் குத்தினார். காயமுற்ற எஸ்.ஐ., அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் குணமடைந்தார்.
வழக்கு திருநெல்வேலி மகிளா கோர்ட்டில் நடந்தது. நீதிபதி பன்னீர்செல்வம், ஆறுமுகம் என்ற படையப்பாவிற்கு 5 ஆண்டு சிறைத் தண்டனையும் ரூ. 13,500 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

