/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
அடுத்தடுத்து 7 வீடுகளில் திருடிய முகமூடி கும்பல்; எஸ்.பி.,யிடம் பொதுமக்கள் புகார்

ADDED : ஜன 28, 2026 12:41 AM
திருநெல்வேலி: திருநெல்வேலி அருகே கிருபா நகரில் அடுத்தடுத்து 7 வீடுகளில் திருடிய முகமூடி கும்பலால் அச்சமடைந்த பொதுமக்கள் பாதுகாப்பு கோரி எஸ்.பி.,யிடம் புகார் மனு அளித்தனர்.
திருநெல்வேலி அருகே சீவலப்பேரி சாலையில் கிருபா நகரில் 500 வீடுகள் உள்ளன. குடியரசு தினத்தன்று இரவு அடுத்தடுத்து 7 வீடுகளில் கதவை உடைத்து புகுந்த மர்ம கும்பல் பணம், நகைகளை திருடிச்சென்றனர்.
தாலுகா போலீசார் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் மர்ம நபர்கள் 3 பேர் தலையில் வேட்டியை முகமூடி போல மறைத்துக் கொண்டு நடமாடுவது பதிவாகியிருந்தது.
தொடர் திருட்டு சம்பவங்களால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். 2024லும் இதேபோல் சம்பவங்கள் நடந்துள்ளன. எனவே தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என கிருபா நகர் குடியிருப்போர் சங்கத்தினர் திருநெல்வேலி எஸ்.பி., பிரசன்னகுமாரிடம் புகார் மனு அளித்தனர்.