/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
அனுமதியின்றி கட்டிய வணிக வளாகங்களுக்கு 'சீல்': நெல்லை மாநகராட்சி நடவடிக்கை

ADDED : மார் 05, 2025 11:59 AM

திருநெல்வேலி: திருநெல்வேலியில் அனுமதி இன்றி கட்டப்பட்ட 12 கடைகள் கொண்ட வணிக வளாகத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
திருநெல்வேலி மாநகராட்சி எல்லையில் மாநகராட்சி அனுமதி இன்றி 200 கட்டடங்கள் மற்றும் வணிக வளாகங்கள் உள்ளன. மேலும், உள்ளூர் திட்ட குழுமத்தின் (LPA) அனுமதி இன்றி 68 கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன.
இது தொடர்பாக புகார்கள் எழுந்ததை தொடர்ந்து மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவின் பேரில், மாநகராட்சி கமிஷனர் சுகபுத்திரா நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதன் அடிப்படையில் 2024ம் ஆண்டு நவம்பர் மாதம் 4 கட்டடங்களுக்கு சீல் வைக்கப்பட்டது.
இன்று, மேலப்பாளையம் அலங்கார் தியேட்டர் அருகே அனுமதி பெறாமல் கட்டப்பட்ட தனியார் வணிக வளாகம் அதிகாரிகளின் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கட்டடத்தின் தரைத்தளத்தில் 6 கடைகள், முதல் மாடியில் 6 கடைகள் என மொத்தம் 12 கடைகளுக்கு அதிகாரிகள் இன்று சீல் வைத்தனர்.
இந்த நடவடிக்கையில் மாநகராட்சி சிட்டி உதவி திட்டக் குழு அலுவலர் கெபின் ஜாய், உதவி பொறியாளர் சந்தோஷம், இளநிலை பொறியாளர் சிவசுப்பிரமணியம் உள்ளிட்ட அதிகாரிகள் ஈடுபட்டனர்.