/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
கழுத்தை அறுத்துக்கொண்ட நெல்லை சிறைக் கைதி
/
கழுத்தை அறுத்துக்கொண்ட நெல்லை சிறைக் கைதி
ADDED : ஜன 12, 2026 06:39 AM
திருநெல்வேலி: திருநெல்வேலி மத்திய சிறையில் உள்ள கொலை வழக்கு கைதி கழுத்தை அறுத்துக் கொண்டார்.
துாத்துக்குடியில் 2003ல் ஆத்திப்பழம் என்பவர் கொலை செய்யப்பட்டதற்கு பழிக்கு பழியாக 2023ல் வழக்கறிஞர் முத்துக்குமார் கொலை செய்யப்பட்டார்.
முத்துக்குமார் கொலை வழக்கில் துாத்துக்குடியை சேர்ந்த ராஜரத்தினம் 36, என்பவர் கைது செய்யப்பட்டு திருநெல்வேலி மத்திய சிறையில் உள்ளார். அவருக்கு நீண்ட காலமாக ஜாமின் கிடைக்கவில்லை.
தனக்கு வயிற்று வலி, விரை வீக்கம் உள்ளது என கூறி தன்னை மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்புமாறு கேட்டுக் கொண்டார்.
ஆனால் நோயின் முக்கியத்துவம் கருதி சம்பந்தப்பட்டவர்கள் மட்டுமே வெளியே அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்படுகின்றனர்.
ராஜரத்தினம் அனுப்பப்படாததால் சிறை வளாகத்தில் சேவிங் பிளேட் மூலம் தனது கழுத்தை அறுத்துக் கொண்டார். அவருக்கு அங்கேயே சிகிச்சை அளிக்கப்பட்டது.

