/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
நெல்லையப்பர் கோயில் யானைக்கு உடல்நலக்குறைவு
/
நெல்லையப்பர் கோயில் யானைக்கு உடல்நலக்குறைவு
ADDED : ஜன 11, 2025 11:05 PM

திருநெல்வேலி:திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் யானை காந்திமதி 56, உடல் நலக்குறைவால் சிரமப்படுகிறது.
இக்கோயில் விழாக்கள், தேரோட்டம் போன்ற நிகழ்வுகளில் சுவாமிக்கு முன் காந்திமதி செல்லும்.
நன்கொடையாளர்களால் 1985ல் இக்கோயிலுக்கு வழங்கப்பட்டது. வயது காரணமாக காந்திமதி உடல் எடை அதிகரிப்பு, மூட்டு வலி போன்றவற்றால் அவதிப்படுகிறது. இடது காலில் புண் ஏற்பட்டதால் நடக்கவும் சிரமப்படுகிறது.
கடந்த சில தினங்களாக யானை நின்றவாறே துாங்கியது. நேற்று படுத்த யானையால் மீண்டும் எழ முடியவில்லை. எனவே கோயில் அதிகாரிகள், கால்நடைத்துறை டாக்டர்கள் முன்னிலையில் யானை கிரேன் பெல்ட் மூலம் கட்டி துாக்கி நிறுத்தப்பட்டது. எனினும் நிற்க முடியவில்லை.