ADDED : பிப் 08, 2025 01:19 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநெல்வேலி,:திருநெல்வேலி மாவட்டம் மேலத்திடியூர் அருகே தமிழாகுறிச்சி பகுதியில் வடக்கு பச்சையாற்றின் குறுக்கே 75 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட அணைக்கட்டு இருந்தது. 2023 டிச., 17, 18ல் பெய்த பலத்த மழை, வெள்ளத்தால் அணை சேதமடைந்தது.
எனவே ரூ 9.5 கோடி மதிப்பில் நீர்வளத்துறை சார்பில் புதிய அணை கட்டப்பட்டது.
2024 மே 14 ல் துவங்கிய பணிகள் அக். 30ல் நிறைவு பெற்றது .இந்த அணைக்கட்டு மூலம் 191 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறுகின்றன.
இந்த புதியஅணையை நீர்வளத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர்.க. மணிவாசன், நீர்வளத்துறை முதன்மை தலைமை பொறியாளர் சா.மன்மதன், நீர்வளத்துறை மதுரை மண்டல தலைமை பொறியாளர் எஸ். ரமேஷ் இணை இயக்குனர் நவநீதன் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.