தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/தமிழகத்தில் தினகரன் ஆதரவுடன்ஆட்சி மாற்றம்: திருநாவுக்கரசர் ஆருடம்

தமிழகத்தில் தினகரன் ஆதரவுடன்ஆட்சி மாற்றம்: திருநாவுக்கரசர் ஆருடம்

தமிழகத்தில் தினகரன் ஆதரவுடன்ஆட்சி மாற்றம்: திருநாவுக்கரசர் ஆருடம்


ADDED : செப் 11, 2017 02:02 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 11, 2017 02:02 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருநெல்வேலி;தமிழகத்தில் தினகரன் அணியினர் மற்றும் எதிர்க்கட்சியினர் இணைந்து ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடிவெடுக்கப்படும் என காங்.,கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்தார்.தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் மகளுக்கும், நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் முன்னாள்அ.தி.மு.க.,எம்.எல்.ஏ.,இசக்கிசுப்பையாவின் மகனுக்கும் திருமணம் நடந்தது. நேற்று தென்காசியில் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. முன்னாள் அமைச்சரான இசக்கிசுப்பையா தற்போது டி.டி.வி.,தினகரன் அணியில் உள்ளார்.எனவே நேற்று திருமண நிகழ்ச்சிக்கு தினகரன் வந்திருந்தார். தென்காசி வரும் வழியில் அவருக்கு கட்சியினர் வாசுதேவநல்லுார், புளியங்குடி உள்பட பல்வேறு இடங்களில் வரவேற்பளித்தனர்.

முன்னதாக தென்காசியில் செய்தியாளர்களிடம் பேசிய திருநாவுக்கரசர், தமிழக சட்டசபையில் எடப்பாடி அரசு பெரும்பான்மையை இழந்துள்ளது. எனவே கவர்னர் இதுகுறித்து நடவடிக்கை எடுக்காவிட்டால் மக்களை திரட்டி போராடுவோம். உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ. உடன் கூட்டணி என மத்திய அரசு மிரட்டி அறிவிப்பு வெளியிட செய்கிறது. ஆளுங்கட்சியை விட அதிக எம்.எல்.ஏ.,க்களை கொண்டிருக்கும் எதிர்க்கட்சிகளுடன் இணைந்து தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவது குறித்து வரும் நாட்களில் முடிவெடுக்கப்படும் என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us