மின்தடை குறித்து பொதுமக்கள் எந்த நேரமும் புகார் தெரிவிக்கலாம்
மின்தடை குறித்து பொதுமக்கள் எந்த நேரமும் புகார் தெரிவிக்கலாம்
ADDED : ஜூலை 10, 2010 02:52 AM
திருநெல்வேலி:மின்தடை குறித்து எந்த நேரத்திலும் தொலைபேசி மூலம் பொதுமக்கள் புகர் தெரிவிக்கலாம் என மின்சார வாரியம் அறிவித்துள்ளது.தமிழ்நாடு மின்சார வாரியம், நெல்லை மின் பகிர்மான வட்டம், நெல்லை நகர்புற கோட்டம் சமாதானபுரத்தில் மின்தடை குறை தீர்க்கும் மையம் இயங்கி வருகிறது.
இம்மையத்தில் மின்தடை சம்பந்தமாக ஏற்படும் குறைகளை 0462 2562900, 0462 12660 என்ற எண்ணை தொடர்பு கொள்ள வேண்டும். இயலவில்லை எனில் 9445859032, 9445859034, 9445859035 என்ற எண்களைத் தொடர்பு கொண்டு 24 மணி நேரமும் தெரியப்படுத்தலாம்.
மேலும் மின்தடை சம்பந்தப்பட்ட குறைகளை பதிவு செய்யும்போது மின் இணைப்பு எண்ணையும் தெரியப்படுத்தவும். இதற்காக மின்வாரிய அலுவலகத்தை நேரில் அணுகத் தேவையில்லை. பதிவு செய்யப்பட்ட மின்தடை சம்பந்தப்பட்ட குறைகள் உடன் அந்ததந்த பகுதி கம்பியாளரிடம் போன் மூலம் தெரிவிக்கப்படும்.நெல்லை நகர்புறப் பகுதியைச் சேர்ந்த ஜங்ஷன், பெருமாள்புரம், மகாராஜநகர், மேலப்பாளையம், டவுன், தச்சநல்லூர், பேட்டை, பழையபேட்டை, சமாதானபுரம், விஎம் சத்திரம், சாந்திநகர், ரெட்டியார்பட்டி, வண்ணார்பேட்டை, மற்றும் நெல்லை மாவட்டத்தில் உள்ள டவுன் பஞ்., பகுதிகளான ஆலங்குளம் டவுன், தாழையூத்து டவுன், நான்குநேரி டவுன், மூலக்கரைப்பட்டி, குற்றாலம், ஆய்குடி, செங்கோட்டை டவுன், சுரண்டை டவுன், கீழப்பாவூர், திருவேங்கடம், கல்லிடைக்குறிச்சி, வீரவநல்லூர், விக்கிரமசிங்கபுரம், ஆழ்வார்குறிச்சி, அம்பாசமுத்திரம் டவுன், சேரன்மகாதேவி, கோபாலசமுத்திரம், முக்கூடல், வள்ளியூர், பணகுடி, திசையன்விளை டவுன், ஏர்வாடி, களக்காடு டவுன், திருக்குறுங்குடி, சிவகிரி, ராயகிரி, வாசுதேவநல்லூர், சுந்தரபாண்டியபுரம், வடகரை ஆகியப் பகுதிகளில் வசிப்பவர்களும் மேற்கண்ட எண்களில் தொடர்பு கொண்டு, மின்தடை சம்பந்தமான குறைகளை பதிவு செய்யலாம்.
இந்த குறைகேட்பு மையத்தில் சாந்திநகர் மற்றும் ரெட்டியார்பட்டி பிரிவு அலுவலகத்தைச் சார்ந்த பகுதிகள் புதிதாக இணைக்கப்பட்டுள்ளன என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.நெல்லை மாவட்டத்தில் உள்ள டவுன் பஞ்., பகுதிகளைச் சேர்ந்தவர்கள் மட்டும் மேற்கண்ட தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளவும். இதர பகுதிகளில் உள்ளவர்கள் அந்தந்த பகுதிகளில் உள்ள மின்வாரிய அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளவும்.இத்தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் பிச்சமுத்து வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
