/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
அல்வாவில் தேள் இருந்ததாக புகார் நெல்லையில் அதிகாரிகள் ஆய்வு
/
அல்வாவில் தேள் இருந்ததாக புகார் நெல்லையில் அதிகாரிகள் ஆய்வு
அல்வாவில் தேள் இருந்ததாக புகார் நெல்லையில் அதிகாரிகள் ஆய்வு
அல்வாவில் தேள் இருந்ததாக புகார் நெல்லையில் அதிகாரிகள் ஆய்வு
ADDED : ஜூலை 16, 2025 11:37 PM

திருநெல்வேலி : திருநெல்வேலி பிரபல சாந்தி ஸ்வீட்ஸ் கடையில் வாங்கிய அல்வாவில் தேள் இருந்ததாக வாடிக்கையாளர் புகார் அளித்ததால் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
திருநெல்வேலி ஜங்ஷன் பஸ் ஸ்டாண்ட் ,ரயில்வே ஸ்டேஷன் செல்லும் பாதையில் உள்ள சாந்தி ஸ்வீட்ஸ் நிறுவனம் புகழ்பெற்றது. இருட்டுக்கடை அல்வாவுக்கு நிகரான ஸ்வீட்ஸ் ஆக இருப்பதால் இதே சாந்தி ஸ்வீட்ஸ் பெயரில் திருநெல்வேலி ஜங்ஷன் பஸ் ஸ்டாண்டிலும், புதிய பஸ் ஸ்டாண்டிலும் 50க்கும் மேற்பட்ட அல்வா கடைகள் உள்ளன.
இந்நிலையில் சாந்தி ஸ்வீட்ஸ் அல்வா வாங்கிய ஒருவர் அதில் சிறிய தேள் இறந்த நிலையில் இருப்பதாக வீடியோ பதிவிட்டார். இதுகுறித்து நேற்று உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் புஷ்பராஜ் தலைமையில் அதிகாரிகள் சாந்தி ஸ்வீட்ஸ்ன் கோடவுன் மற்றும் அல்வா தயாரிக்கும் இடத்தில் ஆய்வு செய்தனர்.
புஷ்பராஜ் கூறுகையில்'' சாந்தி ஸ்வீட்ஸ் நிறுவனத்தில் அல்வா தயாரிக்கும் முறையை பார்வையிட்டோம். மிகுந்த பாதுகாப்பு எச்சரிக்கையுடன் செயல்படுகின்றனர். எனினும் ஜன்னல் வழியே சிறிய பூச்சிகள் வராமல் இருக்க வலை அடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அல்வா தயாரிக்கும் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு மருத்துவச் சான்றிதழ் பெறப்பட்டுள்ளதா என ஆய்வு மேற்கொண்டோம். இது குறித்து 15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அல்வா தயாரிப்பதை நிறுத்தும்படி எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என்றார்.