/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
மூதாட்டியை கட்டிப்போட்டு 25 பவுன், பணம் கொள்ளை
/
மூதாட்டியை கட்டிப்போட்டு 25 பவுன், பணம் கொள்ளை
ADDED : ஜன 09, 2026 06:15 AM

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லியில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கயிற்றால் கட்டிப்போட்டு 25 பவுன் நகை, ரூ.3 லட்சத்தை கொள்ளையடித்து சென்ற மூவரை போலீசார் தேடி வருகின்றனர்.
சுத்தமல்லி அருகே பொன்விழாநகரைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மனைவி ஆண்டிச்சி 65. நேற்று மதியம் மாரியப்பன் வெளியே சென்றார். ஆண்டிச்சி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது மர்ம நபர்கள் 3 பேர் ஆண்டிச்சியை கயிற்றால் கட்டி போட்டனர். பின் அவர் அணிந்திருந்த நகைகள், கம்மல், மூக்குத்தி மற்றும் வீட்டில் பீரோவில் இருந்த பணம், நகைகளை கொள்ளையடித்து தப்பி சென்றனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் 25 பவுன் நகைகள், ரூ. 3 லட்சம் கொள்ளை போனது தெரியவந்தது. இதில் ஈடுபட்ட மூவரை சுத்தமல்லி போலீசார் தேடி வருகின்றனர்.

