/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
மூதாட்டியின் காதை அறுத்து பாம்படம் கொள்ளை
/
மூதாட்டியின் காதை அறுத்து பாம்படம் கொள்ளை
ADDED : அக் 08, 2025 03:05 AM
திருநெல்வேலி:ஏர்வாடி அருகே மூதாட்டியின் காதை அறுத்து, பாம்படத்தை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடுகின்றனர்.
திருநெல்வேலி மாவட்டம், ஏர்வாடி அருகே மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் சிவலிங்கம். இவரது மனைவி பொன்னம்மாள், 90. தம்பதியர் இருவரும் தனியாக வசிக்கின்றனர். இவர்களது மகன் அருகில் மற்றொரு வீட்டில் வசிக்கிறார்.
நேற்று முன்தினம் இரவு, இருவரும் வீட்டில் தூங்கினர். காற்றுக்காக அவர்கள் கதவை திறந்து வைத்திருந்ததை பயன்படுத்தி, வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள், மூதாட்டி காதில் அணிந்திருந்த 2 சவரன் பாம்படத்தை, காதில் பிளேடால் அறுத்து எடுத்தனர். மூதாட்டி அலறல் கேட்டு, கணவர் எழுவதற்குள் மர்ம நபர்கள் தப்பினர். ஏர்வாடி போலீசார் விசாரிக்கின்றனர்.