/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
தேரோட்டத்தில் சபாநாயகருக்கு எதிர்ப்பு
/
தேரோட்டத்தில் சபாநாயகருக்கு எதிர்ப்பு
ADDED : பிப் 12, 2025 02:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டம் உவரி சுயம்புலிங்க சுவாமி கோயிலில் தைப்பூச தேரோட்டம் நடந்தது. இதனை சபாநாயகர் அப்பாவு துவக்கி வைப்பதற்கு ஹிந்து முன்னணியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
' மாற்று மதத்தை சேர்ந்த சபாநாயகர், கிறிஸ்தவர்கள் தான் இந்தியாவிற்கு கல்வியை கொண்டு வந்தார்கள் என மேடைகள் தோறும் பேசி வருகிறார். அவர் கோயில் தேரோட்டத்தை துவக்கி வைக்கக் கூடாது' என்றனர். மாநில பொதுச் செயலாளர் அரசுராஜா உள்ளிட்ட ஹிந்து முன்னணியினரை போலீசார் கைது செய்தனர்.
சபாநாயகர் தேரோட்டத்தில் பங்கேற்றார். கைதானவர்கள் தேரோட்டம் முடிந்த பின் விடுவிக்கப்பட்டனர்.

