sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 30, 2026 ,பங்குனி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

 பெண்ணுக்கு தவறான ஸ்கேன் அறிக்கை ரூ.36,100 இழப்பீடு வழங்க உத்தரவு

/

 பெண்ணுக்கு தவறான ஸ்கேன் அறிக்கை ரூ.36,100 இழப்பீடு வழங்க உத்தரவு

 பெண்ணுக்கு தவறான ஸ்கேன் அறிக்கை ரூ.36,100 இழப்பீடு வழங்க உத்தரவு

 பெண்ணுக்கு தவறான ஸ்கேன் அறிக்கை ரூ.36,100 இழப்பீடு வழங்க உத்தரவு


ADDED : ஜன 29, 2026 05:45 AM

Google News

ADDED : ஜன 29, 2026 05:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி: தவறான ஸ்கேன் அறிக்கையால் நோயை சரியாக கண்டறிய முடியாமல் சிகிச்சை தாமதமாகி பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.36,100 இழப்பீடு வழங்க வேண்டும் என திருநெல்வேலி மாவட்ட கூடுதல் நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையம் உத்தரவிட்டது.

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் தாலுகா, விக்கிரமசிங்கபுரம், அம்பலவாணபுரத்தைச் சேர்ந்தவர் ஸ்டீபன் செல்லதுரை மனைவி சுனிதா 37. இவர் 2023 ஏப்ரலில் கடுமையான வயிற்று வலியால் பாதிக்கப்பட்டு, விக்கிரமசிங்கபுரம் தனியார் டாக்டர் பரிந்துரையில் திருநெல்வேலி முருகன்குறிச்சியில் உள்ள தனியார் பரணி ஸ்கேன் மையத்தில் பரிசோதனை செய்தார். அங்கு வழங்கப்பட்ட ஸ்கேன் அறிக்கையில் அவருக்கு நோய்த்தன்மை தவறாக குறிப்பிடப்பட்டதால் சிகிச்சை தாமதமானதாகவும், இதனால் அதிக வயிற்று வலி உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது.

அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் மேற்கொண்ட பரிசோதனையில், ஸ்கேன் அறிக்கையில் லேசான சிறுநீர்ப்பை அழற்சி என தவறாக குறிப்பிடப்பட்டிருந்ததும், உண்மையில் சிறுநீரக கல்லடைப்பு இருப்பதும் உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து பாதிக்கப்பட்ட சுனிதா, ஸ்கேன் மைய டாக்டர் மற்றும் நிர்வாகத்தின் மீது வழக்கறிஞர் பிரம்மா மூலம் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த ஆணையத் தலைவர் பிறவி பெருமாள், உறுப்பினர் சண்முக பிரியா ஆகியோர் மருத்துவ கவனமின்மை மற்றும் சேவை குறைபாடு இருப்பதாகத் தீர்மானித்தனர்.

ஸ்கேன் கட்டணமாக வசூலித்த ரூ.1100 திருப்பி வழங்கவும், உடல் வலி, மன உளைச்சல், கூடுதல் மருத்துவச் செலவுகளுக்காக ரூ.25,000 இழப்பீடும், வழக்குச் செலவாக ரூ.10,000 வழங்கவும் உத்தரவிட்டனர். மொத்தமாக ரூ.36,100ஐ 45 நாட் களுக்குள் வழங்க வேண்டும் என தெரிவித்துள்ள னர்.






      Dinamalar
      Follow us