/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
திருநெல்வேலியில் ஆக்கிரமிப்புகளை தாங்களாக அகற்றிக்கொள்ள உத்தரவு
/
திருநெல்வேலியில் ஆக்கிரமிப்புகளை தாங்களாக அகற்றிக்கொள்ள உத்தரவு
திருநெல்வேலியில் ஆக்கிரமிப்புகளை தாங்களாக அகற்றிக்கொள்ள உத்தரவு
திருநெல்வேலியில் ஆக்கிரமிப்புகளை தாங்களாக அகற்றிக்கொள்ள உத்தரவு
ADDED : ஜன 04, 2024 12:59 AM
திருநெல்வேலி:திருநெல்வேலியில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் அங்குள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என கலெக்டர் கார்த்திகேயனிடம் கோரிக்கை வைத்தனர். இந்நிலையில் 24 மணி நேரத்தில் ஆக்கிரமிப்புகளை தாங்களாக அகற்றிக் கொள்ள வேண்டும் என மாநகராட்சி கமிஷனர் தாக்கரே உத்தரவிட்டுள்ளார்.
திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் டிச., 17, 18 ல் பெய்த அதிகன மழையால் மிகுந்த பாதிப்பு ஏற்பட்டது. திருநெல்வேலி புதுபஸ் ஸ்டாண்ட் அருகே வேய்ந்தான்குளத்திற்கு நீர் வரத்து பகுதியில் உள்ள சேவியர் காலனியில் ஆக்கிரமிப்பு கட்டடங்களால் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது.
ஏற்கனவே இது குறித்து கடந்த அக்டோபரில் பொதுமக்கள் கலெக்டரை சந்தித்து ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை வைத்திருந்தனர். நடவடிக்கை எடுக்காததால் வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டன. நேற்று குடியிருப்பு நலச்சங்கத்தினர், சமூக ஆர்வலர் பெர்டின் ராயன் உள்ளிட்டோர் கலெக்டர் கார்த்திகேயனை சந்தித்து புகார் மனு தெரிவித்தனர். நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் உறுதி அளித்தார்.
இதனிடையே திருநெல்வேலி மாநகராட்சி கமிஷனர் தாக்கரே விடுத்துள்ள அறிக்கையில், மாநகராட்சி பகுதியில் போக்குவரத்திற்கும் பொது மக்களுக்கும் இடையூறாக ஆக்கிரமித்துள்ள பொருட்கள், கூரைகளை 24 மணி நேரத்திற்குள் தாங்களாகவே முன்வந்து அகற்றிட வேண்டும்.
தவறும் பட்சத்தில் மாநகராட்சி நடவடிக்கை எடுத்து அகற்றும். ஆக்கிரமிப்பு அபராத கட்டணம் வசூலிக்கும். கட்டுமானம் மற்றும் கட்டட பராமரிப்பு பணி செய்வோர் இடிபாடுகளை பொது இடங்களிலோ கொட்ட கூடாது, எனவும் தெரிவித்துள்ளார்.