/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
உரிய நேரத்தில் உணவு சப்ளை செய்யாத ஓட்டல் ரூ.7000 இழப்பீடு வழங்க உத்தரவு

ADDED : பிப் 03, 2024 01:58 AM
திருநெல்வேலி:பணம் வாங்கிய பிறகும் உரிய நேரத்தில் பார்சல் உணவு சப்ளை செய்யாத ஓட்டல் ரூ.7000 இழப்பீடு வழங்க திருநெல்வேலி நுகர்வோர் நீதிமன்றம் உத்தர விட்டது.
திருநெல்வேலியைச்சேர்ந்தவர் சிவசுப்பிர மணியன். இவர் நாகர்கோவிலில் இருந்து ராமேஸ்வரம் கோயிலுக்கு பஸ்சில் கிளம்பினார்.
நாகர்கோவிலில் ஒரு ஓட்டலில் உணவு பார்சல் பெற ரூ.484 செலுத்தி விட்டு காத்திருந்தார். குறிப்பிட்ட நேரத்தில் உணவு பார்சலை தரவில்லை.
அந்த பார்சல் வேறு நபருக்கு சென்று விட்டதால் தற்போது ஆர்டர் செய்த உணவு இல்லை எனவும் இருக்கும் உணவை வாங்கிக் கொள்ளும் படியும் கூறியனர்.
எனவே அவர் உணவை வாங்காமல் பஸ்சில் பட்டினியாக கிளம்பிவிட்டார். இது குறித்து திருநெல்வேலி நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பிரம்மா மூலம் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி கிளாட்ஸ்டன் பிளஸ்ட் தாகூர், உறுப்பினர் கனகசபாபதி ஆகியோர் புகார்தாரரின் மன உளைச்சலுக்கு ரூ. 5000, வழக்கு செலவு ரூ.2000 என மொத்தம் ரூ. 7000 இழப்பீடு வழங்க ஓட்டல் நிர்வாகத்திற்கு உத்தர விட்டனர்.