/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
சார் பதிவாளரை சந்திக்க வருவோருக்கு நாற்காலிகளை போட உத்தரவு
/
சார் பதிவாளரை சந்திக்க வருவோருக்கு நாற்காலிகளை போட உத்தரவு
சார் பதிவாளரை சந்திக்க வருவோருக்கு நாற்காலிகளை போட உத்தரவு
சார் பதிவாளரை சந்திக்க வருவோருக்கு நாற்காலிகளை போட உத்தரவு
ADDED : மே 17, 2025 12:53 AM
திருநெல்வேலி:சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு வருவோரை நாற்காலியில் அமர வைத்து தான் விவரங்களை கேட்க வேண்டும் என பதிவுத் துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் 587 சார்பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன. இங்கு பத்திரப்பதிவுகள், திருமணம் பதிவுகள், வில்லங்கச் சான்றிதழ் நகல் கேட்டல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடக்கின்றன. சார் பதிவாளர் அலுவலகங்களில் கோரிக்கைகளை சார் பதிவாளர் மற்றும் உதவியாளர், இளநிலை உதவியாளர்களிடம் கேட்க பொதுமக்கள் செல்கின்றனர். அவ்வாறு சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு வருவோரை நாற்காலிகளில் உட்கார வைத்து தான் சார் பதிவாளர்கள் பேச வேண்டும். எந்த சூழ்நிலையிலும் அவர்களை நிற்க வைத்துக்கொண்டு பதில் அளிக்கக்கூடாது.
சார்பதிவாளர் மற்றும் உதவியாளர், இளநிலை உதவியாளர் இருக்கைகள் முன்பாக குறைந்தது இரண்டு நாற்காலிகளை போட வேண்டும். இது தொடர்பாக ஏற்கனவே பல்வேறு உத்தரவுகள் மற்றும் அறிவுரைகள் ஆய்வு கூட்டங்களில் தொடர்ந்து வழங்கப்பட்டிருந்தாலும் தற்போது சிசிடிவி மூலம் ஆய்வு செய்த போது பல அலுவலகங்களில் இந்த நடைமுறை பின்பற்றப்படவில்லை. இது தொடர்பாக துணை பதிவுத்துறை தலைவர்கள் மாவட்ட பதிவாளர்கள் கண்காணிக்கவும் அறிவித்தப்படுகிறது. இந்த அறிவுறுத்தல்களை மீறும் பட்சத்தில் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு பத்திர பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.