sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

தி.மு.க., அரசை வீழ்த்துவது தான் நோக்கம் திருநெல்வேலியில் பழனிசாமி பேச்சு

/

தி.மு.க., அரசை வீழ்த்துவது தான் நோக்கம் திருநெல்வேலியில் பழனிசாமி பேச்சு

தி.மு.க., அரசை வீழ்த்துவது தான் நோக்கம் திருநெல்வேலியில் பழனிசாமி பேச்சு

தி.மு.க., அரசை வீழ்த்துவது தான் நோக்கம் திருநெல்வேலியில் பழனிசாமி பேச்சு

2


ADDED : ஆக 05, 2025 04:52 AM

Google News

ADDED : ஆக 05, 2025 04:52 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி: திருநெல்வேலியில் நேற்று சுற்றுப்பயணம் மேற்கொண்ட அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி. நேற்று மாலை 5:00 மணிக்கு வாகையடிமுனையில் பிரசாரத்தை துவக்கினார். பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன், அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் கணேசராஜா உடன் இருந்தனர்.

மழை பெய்ததால் பழனிசாமியால் நீண்ட நேரம் பேச முடியவில்லை. பின்னர் மாலை 6:30 மணிக்கு சமாதானபுரம் பகுதியில் பஸ்சில் நின்றபடி பேசினார்.

அவர் பேசியது:கூட்டணி என்பது காலத்திற்கு ஏற்ற மாதிரிதான். மக்கள் தான் நிலையானவர்கள். எங்கள் கூட்டணி வரும் தேர்தலில் வெற்றி பெறும். தி.மு.க., ஆட்சி நடந்துள்ள 50 மாதங்களில் விவசாயிகள், ஆசிரியர்கள் என எல்லா தரப்பினரும் தி.மு.க., அரசுக்கு எதிராக போராட்டத்தில் இறங்கிவிட்டனர். தமிழகம் போராட்ட களமாக மாறிவிட்டது.

அ.தி.மு.க. என்ற ஒரு கட்சி இருப்பதால்தான் தமிழகத்தில் அதிகம் பேர் படிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. மாணவர்களுக்கு ஆல் பாஸ் போட்டது அ.தி.முக ஆட்சியில் தான்.

எப்போதும் மத்திய அரசையே தி.மு.க.வினர் குறை சொல்லிக் கொண்டிருப்பார்கள். மத்திய அரசில் அதிகாரத்தில் இருந்த போது தி.மு.க.,வினர், தமிழக மக்கள் குறித்து கவலைப்படவில்லை.முரசொலி மாறனுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தபோது கூட கேபினட் அந்தஸ்துடன் இலாகா இல்லாத அமைச்சர் பொறுப்பு வழங்கினர். வி.பி.சிங், குஜரால், தேவகவுடா, இப்படி 14 ஆண்டு காலம் மத்தியில் ஆட்சி அதிகாரத்தை அனுபவித்தவர்கள் . 1999 பாராளுமன்ற தேர்தலிலும் 2001 சட்டசபை தேர்தலிலும் தி.மு.க., பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்திருந்தது.

அ.தி.மு.க.,வின் நோக்கம் தி.மு.க.,அரசை வீழ்த்த வேண்டும் என்பதுதான். பா.ஜ.,,வின் நோக்கமும் அதுதான் . அ .தி.மு.க யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைக்கும். இது குறித்து ஏன் தி.மு.க. தலைவர் கவலைப்படுகிறார்.

தி.மு.க., கூட்டணி வெற்றி பெறாது என்ற நிலைக்கு வந்துவிட்டார்கள்.

எனவே தான் வீடு வீடாக சென்று கதவைத் தட்டி ஓரணியில் தமிழ்நாடு என சொல்கிறார்கள். உறுப்பினராக சேர்க்க கெஞ்சுகிறார்கள். கருணாநிதி குடும்பத்தைப் போல வாரிசு அரசியல் அ.தி.மு.க.,வில் இல்லை.

மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆண்டபோது தி.மு.க.,வினர் அங்கம் வகித்தபோதுதான் நீட் தேர்வு அமல்படுத்தப்பட்டது. நீட் தேர்வு ரத்துக்கு தான் தமது முதல் கையெழுத்து என ஸ்டாலின் தெரிவித்தார். ஆனால் ஆட்சி அமைத்து 50 மாதங்கள் ஆகிவிட்டது.

25 மாணவர்கள் நீட் தேர்வுக்காக உயிரிழந்தனர் இதற்கு காரணம் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தான். மத்திய அமைச்சர் ஒருவரின் மனைவி தான் நீட் தேர்வுக்கு ஆதரவாக கோர்ட் ஆதரவாக வழக்காடினார்.

உதய் மின் திட்டத்தில் அ.தி.மு.க., ஒப்பந்தம் போட்டதால்தான் மின் கட்டணம் உயர்வு என முதல்வர் ஸ்டாலின் பச்சை பொய்யை சொல்கிறார். அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் மின் கட்டணம் உயர்த்தப்படவில்லை. தி.மு.க., ஆட்சி வந்த பிறகுதான் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. வரிகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளது.

திருநெல்வேலியில் ஜாபர் அலி என்ற ஓய்வு எஸ்.ஐ., தனக்கு கொலை மிரட்டல் இருப்பது குறித்து முதல்வருக்கு முன்கூட்டியே தெரிவித்து இருந்தார். அவர் உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் ஓய்வு எஸ்.ஐ., ஜாபர் அலியை காப்பாற்றி இருக்கலாம்.

போதை பொருள் விற்பனை அமோகமாக உள்ளது. போதைக்கு எதிராக போராட்டம் நடத்துங்கள், நாங்கள் துணை நிற்போம் என பாதிரியார்கள் உறுதி கூறுகிறார்கள்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீரழிந்து விட்டது. திருநெல்வேலி காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் கொலை வழக்கிலேயே குற்றவாளியை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை.

2026-ல் அ.தி.மு.க.,கூட்டணி வெற்றி பெற்ற பிறகு ஏழை என்ற சொல்லே இருக்காது. இவ்வாறு அவர் பேசினார்.






      Dinamalar
      Follow us