/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
நாட்டாமை வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு : 3 பேர் கைது
/
நாட்டாமை வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு : 3 பேர் கைது
நாட்டாமை வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு : 3 பேர் கைது
நாட்டாமை வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு : 3 பேர் கைது
ADDED : பிப் 23, 2026 04:58 AM
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் நாட்டாமை வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
நாங்குநேரி பெருந்தெருவைச் சேர்ந்த அன்பழகன் ஊர் நாட்டாமையாக செயல்படுகிறார். பிப்., 20 நள்ளிரவு இரு டூவீலர்களில் வந்த இருவர் அவரது வீட்டில் பெட்ரோல் குண்டுகளை வீசினர். போலீசார் விசாரித்து நயினார்குளம் இசக்கிமுத்து 20, ராமையன்பட்டி பாலமகேஷ் 19, பட்டர்பிள்ளைபுதுார் நாகராஜன் 19, ஆகியோரை கைது செய்தனர்.
நாங்குநேரி பெருந்தெருவில் பள்ளி மாணவர் சின்னத்துரை சில ஆண்டுகளுக்கு முன் அரிவாளால் வெட்டப்பட்டார். தற்போது பெட்ரோல் குண்டு வீச்சு அதே தெருவில் நடந்துள்ளது. இத்தெருவில் வசிக்கும் பெரும்பாலானோர் பட்டியல் சமூகத்தினர். இங்குள்ள இளைஞர்கள் அம்பேத்கர், திருமாவளவன் படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். இதை விரோதமாக கருதிய வெளியூர் இளைஞர்கள் இச்சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

