/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
'ஆடி' காரில் சாகச பயணம் போலீஸ் வழக்கு
/
'ஆடி' காரில் சாகச பயணம் போலீஸ் வழக்கு
ADDED : ஜூன் 14, 2025 06:17 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநெல்வேலி: திருநெல்வேலியில் இருந்து கன்னியாகுமரி செல்லும் நான்கு வழிச்சாலையில் மூன்றடைப்பு, பாணாங்குளம் -- நாங்குநேரி டோல்கேட் சாலையில், சென்னை பதிவெண் கொண்ட ஒரு ஆடி காரில், இருவர் கதவை திறந்து கொண்டு வேகமாக செல்வதும், காரின் மேல் தளத்தில் அமர்ந்து பயணம் செய்வதுமாக இருந்தனர்.
இதை இன்னொரு காரில் வந்தவர்கள் வீடியோ எடுத்தனர். அந்த வீடியோ வெளியானதால் நாங்குநேரி போலீசார் விசாரித்தனர். சென்னை பதிவெண் கொண்ட ஆடி கார் உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.