/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
துப்பாக்கியுடன் போலீஸ் திருநெல்வேலியில் ரோந்து
/
துப்பாக்கியுடன் போலீஸ் திருநெல்வேலியில் ரோந்து
ADDED : ஜன 12, 2025 07:55 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநெல்வேலி :   திருநெல்வேலி மாநகர பகுதிகளில் வெளியூர்களில் இருந்து வந்து குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சமீபத்தில், இங்கு மாவட்ட கோர்ட் முன்பாக வாலிபர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
தொடர்ந்து, குற்றத்தடுப்பு நடவடிக்கையாக துப்பாக்கி ஏந்திய போலீஸ்காரர் ஒருவர் உட்பட இரு போலீசார் மாநகர பகுதிகளில் டூ - வீலரில் ரோந்து செல்லும் பணியை போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹதிமணி நேற்று துவக்கினார். மொத்தம், ஐந்து குழுவினர் இப்பணியில் ஈடுபடுகின்றனர். நிகழ்வில் போலீஸ் துணை கமிஷனர்கள் வினோத் சாந்தாராம், கீதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

