/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
மாணவியிடம் தகராறு போலீஸ்காரர் கைது
/
மாணவியிடம் தகராறு போலீஸ்காரர் கைது
ADDED : ஜன 24, 2026 02:18 AM

திருநெல்வேலி: திருநெல்வேலியில் கல்லுாரி மாணவி யிடம் தகராறு செய்ததாக ஆயுதப்படை போலீஸ் காரர் கைது செய்யப்பட்டார்.
திருநெல்வேலி சமா தானபுரம் ஜாய்சன் 38, ஆயுதப்படையில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார்.
நேற்று முன்தினம் மாலை, திருநெல்வேலி வண்ணார்பேட்டை தெற்கு பைபாஸ் சாலையில் உள்ள தியேட்டரில் படம் பார்க்க சென்ற ஜாய்சன், முன் வரிசையில் தோழிகளுடன் படம் பார்த்துக் கொண்டிருந்த சமாதானபுரத்தை சேர்ந்த கல்லுாரி மாணவியுடன் தகராறில் ஈடுபட்டார். வாக்குவாதம் முற்றிய நிலையில், அங்கிருந்த வர்கள் சமாதானம் செய்து இருவரையும் அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து அந்த மாணவி ஏறிச் சென்ற பஸ்சை மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து சென்ற ஜாய்சன், சமாதானபுரம் பஸ் நிறுத்தம் பகுதியில் பஸ் நின்றதும் இறங்கி நடந்து சென்ற மாணவியிடம் மீண்டும் தகராறு செய்தார்.
இதுகுறித்து மாணவி தரப்பில் திருநெல்வேலி மாநகர போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் நேற்று ஜாய்சனை கைது செய்தனர்.

