/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
'பூணுால் அறுப்பே நடக்கவில்லை': போலீஸ் அறிவிப்பில் குழப்பம்
/
'பூணுால் அறுப்பே நடக்கவில்லை': போலீஸ் அறிவிப்பில் குழப்பம்
'பூணுால் அறுப்பே நடக்கவில்லை': போலீஸ் அறிவிப்பில் குழப்பம்
'பூணுால் அறுப்பே நடக்கவில்லை': போலீஸ் அறிவிப்பில் குழப்பம்
ADDED : செப் 24, 2024 06:59 AM

திருநெல்வேலி : திருநெல்வேலியில் பூணூல் அறுப்பு சம்பவமே நடக்க வில்லை என போலீசார்கூறியதாக வெளியானஅறிவிப்பில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
திருநெல்வேலி தியாகராஜ நகர் 13வது குறுக்குத் தெருவில் ஆஸ்திக சமாஜம் டிரஸ்ட் உள்ளது. செப்.,21 அங்கு நடந்த பஜனையில் அகிலேஷ் 24 சென்றார்.
டி.வி.எஸ்., நகர் அருகே தனது பூணுாலை டூவீலரில் வந்த நான்கு பேர் அறுத்ததாகஅகிலேஷ் கூறினார். உதவி கமிஷனர்விஜயகுமார் தலைமையில் போலீசார் ஆய்வு மேற்கொண்டனர்.
அங்குள்ள சி.சி.டி.வி., காட்சிகளில் இதுபோன்ற சம்பவம் நடந்ததற்கான காட்சிகள் இல்லை என நேற்று போலீசார் தெரிவித்ததாக தகவல் வெளியானது.
போலீஸ் குழப்பம்
ஆனால் தாங்கள் அப்படி ஒரு அறிவிப்பை வெளியிடவில்லை என திருநெல்வேலி போலீசார் கூறுகின்றனர். அவர்கள் கூறியது: சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி., கேமராக்களில் பதிவு எதுவும் கிடைக்கவில்லை. இதனால் அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என தயாரித்த ஒரு செய்தி குறிப்பு, மேலிட ஒப்புதலுக்காக சென்னை டி.ஜி.பி., அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அங்கிருந்து ஒப்புதல் வழங்கவில்லை. எனவே திருநெல்வேலி போலீசாரும் அதை வெளியிடவில்லை. ஆனால் டி.ஜிபி., அலுவலகத்தில் இருந்து அந்த செய்தி குறிப்பு வெளியே கசிந்துள்ளது என்றனர்.
விசாரிக்க கால அவகாசம் எடுத்துக் கொள்ளாமல் அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என போலீஸ் தரப்பில் முடிவுக்கு வந்தது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.
மேலும் வெளியான செய்தி குறிப்பு உண்மையா இல்லையா என்ற குழப்பமும் நீடிக்கிறது.
இந்நிலையில்அகிலேஷ் வீட்டுக்குமத்திய இணையமைச்சர் எல்.முருகன் நேற்று காலை சென்று பெற்றோர் மற்றும் உறவினர்களை சந்தித்தார். அவர்களின் பாதுகாப்புக்கும்,சம்பவம் குறித்தும் விரைந்து நடவடிக்கை எடுக்கவும் முயற்சிப்பதாக தெரிவித்தார்.