sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

 3 பெண்களை திருமணம் செய்த பாதிரியார் மகன் கைது

/

 3 பெண்களை திருமணம் செய்த பாதிரியார் மகன் கைது

 3 பெண்களை திருமணம் செய்த பாதிரியார் மகன் கைது

 3 பெண்களை திருமணம் செய்த பாதிரியார் மகன் கைது

8


ADDED : ஜன 23, 2026 03:36 AM

Google News

ADDED : ஜன 23, 2026 03:36 AM

8


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி: தஞ்சாவூரை சேர்ந்த பாதிரியாரின் மகன், மூன்று பெண்களை திருமணம் செய்த பு காரில் கைது செய்யப்பட்டார்.

தஞ்சாவூர் பிள்ளையார்பட்டி எம்.ஜி.ஆர்., நகரைச் சேர்ந்தவர் ஜேம்ஸ் ராஜா, பாதிரியார். இவரது மகன் பிரசாத், 34, துபாயில் பணியாற்றி வந்தார்.

கடந்த 2018ல் திருநெல்வேலி அரு கே குன்னத்துாரை சேர்ந்த பிரசன்னா என்ற பெண்ணை திரு மணம் செய்து கொண்டார்.

மனைவியுடன் துபாய் க்கு சென்றார். பிரசன்னாவின் கர்ப்பம் கலைந்ததால், அவரை திருநெல்வேலியில் பெற்றோர் வீட்டில் விட்டு, துபாய் சென்றுவிட்டார்.

பிரசன்னாவுடனான திருமணத்தை மறைத்து, 2025ல் ஈரோடு மாவட்டம் புளியம்பட்டியைச் சேர்ந்த ஷீபா கிரேசி என்பவரை திருமணம் செய்து கொண்டார். பல் டாக்டரான ஷீபா கிரேசியுடன் ஈரோட்டில் குடும்பம் நடத்திய பிரசாத், துபாய்க்கு பணிக்கு செல்வதாக கூறி சென்றவர் திரும்பவில்லை.

ஷீபா கிரேசி துபாய்க்கு சென்று பார்த்த போது அங்கு பிரசாத், கேரளாவைச் சேர்ந்த சரண்யா என்ற பெண்ணுடன் வாழ்க்கை நடத்துவது தெரிந்தது.

அவருடன் தகராறு செய்து, பிரசாத்தை திருநெல்வேலிக்கு அழைத்து வந்த ஷீபா கிரேசி, திருநெல்வேலி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை போலீசில் புகார் அளித்தார்.

இதற்கிடையே, திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் முதல் மனைவி பிரசன்னாவின் சார்பில் அவரது தாய் பாக்கியம் என்பவர், பிரசாத் மீது கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளித்தார். நடவடிக்கை எடுக்க கலெக்டர் சுகுமார் உத்தரவிட்டார்.

பிரசாத் மீது ஐகிரவுண்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து, நேற்று கைது செய்தனர்.

திருமணங்களை மறைத்து, 7 பெண்களை பிரசாத் திருமணம் செய்திருப்பதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அவரை கைது செய்துள்ள போலீசார், சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us