/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
முதல்வர் கேட்டதால் பிரதமர் நிதி தருகிறார் அண்ணாமலை கேட்டதால் அல்ல: அப்பாவு
/
முதல்வர் கேட்டதால் பிரதமர் நிதி தருகிறார் அண்ணாமலை கேட்டதால் அல்ல: அப்பாவு
முதல்வர் கேட்டதால் பிரதமர் நிதி தருகிறார் அண்ணாமலை கேட்டதால் அல்ல: அப்பாவு
முதல்வர் கேட்டதால் பிரதமர் நிதி தருகிறார் அண்ணாமலை கேட்டதால் அல்ல: அப்பாவு
ADDED : அக் 05, 2024 01:19 AM
திருநெல்வேலி,:''முதல்வர் ஸ்டாலின் கேட்டதால் பிரதமர் மோடி நிதி தருகிறார். பா.ஜ., தமிழக தலைவர் அண்ணாமலை கேட்டதால் அல்ல,'' என, திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே ரெங்கபுரத்தில் சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
ரெங்கபுரத்தில் ரூ 4.68 கோடியில் அமைக்கப்பட்ட குளத்தை முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்தார். நிகழ்வில் பங்கேற்ற சபாநாயகர் அப்பாவு கூறியதாவது:
மத்திய அரசு மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய நிதியை தராமல் காலம் தாழ்த்துகிறார்கள். ஏற்கனவே முதல்வர் டில்லியில் பிரதமரை சந்தித்தார். காலதாமதமாக நிதியை தர மறுப்பது நியாயம் இல்லை என வலியுறுத்தினார். முதல்வர் கேட்டதற்கு இணங்க நிதி கிடைக்கும் என நம்புகிறோம். மத்திய நிதியமைச்சர் சென்னை மெட்ரோ 2 வது கட்ட திட்ட செலவுகளை மாநில அரசே பார்த்து கொள்ள வேண்டும் எனக் கூறினார். முதல்வர் பிரதமரை சந்தித்து கேட்டுள்ளதால் 2ம் கட்ட மெட்ரோ திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் தந்ததுடன் மத்திய அரசு தரவேண்டிய நிதியையும் தரும் என நம்புகிறோம். இது தொடர்பாக முதல்வர் பிரதமருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
ஆசிரியர்களுக்கான சம்பளம் உள்ளிட்ட எந்த நிதியையும் மத்திய அரசு தாமதப்படுத்தாது.
ஆசிரியர்களுக்கு ஒருபோதும் சம்பள குறைபாடு வராது. ஒரு தலைப்பில் நிதி இல்லாவிட்டால் வேறு தலைப்பில் இருந்து நிதி வழங்கப்படும்.
அக்., 8ல் அமைச்சரவை கூடும் போது இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும். தமிழக அரசு வெளிப்படை தன்மையுடன் நடக்கிறது.
மெட்ரோ ரயில் திட்டத்திற்கு அண்ணாமலை கேட்டுக்கொண்ட பிறகு தான் நிதி அளிக்க மத்திய அரசு முடிவு எடுத்து இருப்பதாக கூறப்படுவது குறித்து பதிலளித்த அப்பாவு, ''முதல்வர் கோரிக்கையை ஏற்று பிரதமர் கொடுப்பது தான் பெருமையே தவிர ஒரு கட்சியின் ஒன்றிய செயலாளர், கிளை செயலாளர் கேட்பதால் தருவதாக இருந்தால் அந்த அளவுக்கு கட்சியின் கட்டுப்பாட்டில் இவர்கள் அரசு இருப்பதாக பொருள் வருமே அதில் உண்மை இல்லை,'' என்றார்.