/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
மதுபானம் கடத்தியவருக்கு 'காப்பு'
/
மதுபானம் கடத்தியவருக்கு 'காப்பு'
ADDED : அக் 05, 2024 12:42 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநெல்வேலி:திருநெல்வேலியை அடுத்த ராஜாபுதுக்குடியை சேர்ந்தவர் முனியசாமி, 38. இவர் தன் லாரியில் கோவாவில் இருந்து திருநெல்வேலிக்கு ஓட்ஸ் மற்றும், பிஸ்கட்களை அட்டை பெட்டிகளில் எடுத்து வந்தார்.
மதுரை - திருநெல்வேலி நான்கு வழி சாலையில் துாத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே போலீசார் லாரியை சோதனையிட்டனர். அப்போது, லாரியில் பிஸ்கட் பெட்டிகளுக்கு நடுவில், 24 பெட்டிகளில் 1,896 கோவா மாநில மது பாட்டில்கள் இருந்தன.
போலீசார் முனியசாமியை கைது செய்தனர். லாரி, மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.