sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

திருநெல்வேலியில் மழை தாமிரபரணியில் வெள்ளம்

/

திருநெல்வேலியில் மழை தாமிரபரணியில் வெள்ளம்

திருநெல்வேலியில் மழை தாமிரபரணியில் வெள்ளம்

திருநெல்வேலியில் மழை தாமிரபரணியில் வெள்ளம்

1


ADDED : நவ 22, 2024 02:30 AM

Google News

ADDED : நவ 22, 2024 02:30 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை பெய்தது. இதனால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது.

நேற்று காலை வரையிலும் மாஞ்சோலையில் 28, காக்காச்சி எஸ்டேட்டில் 40 , நாலுமுக்கு பகுதியில் 54 ஊத்து எஸ்டேட் பகுதியில் 49 மி.மீ. மழை பதிவானது. தாமிரபரணி ஆற்றில் 4 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் சென்றது.

மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 2 அடி உயர்ந்து 76 அடியை எட்டியது(மொத்த உயரம் 118 அடி). பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 2150 கன அடி வீதம் நீர்வரத்து இருந்தது.

பாபநாசம் அணையும் சேர்வலாறு அணையும் சுரங்கம் மூலம் இணைக்கப்பட்டுள்ளதால் சேர்வலாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் 9 அடி உயர்ந்து 91.38 அடியானது (மொத்த உயரம் 156 அடி).

தற்போது தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் ஆற்றில் குளிக்கவோ, நீர்நிலைகள் அருகில் செல்லவோ வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.






      Dinamalar
      Follow us