/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
சூறாவளியுடன் மழை வாழைகள் சேதம்
/
சூறாவளியுடன் மழை வாழைகள் சேதம்
ADDED : நவ 23, 2025 02:03 AM

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி அருகே சூறாவளியுடன் கனமழை பெய்ததால் ஏராளமான வாழைகள் சேதமடைந்தன.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர் மழையால் அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. சேரன்மகாதேவி அருகே மேலச்செவல், பிரான்சேரி, கோபாலசமுத்திரம், சொக்கலிங்கபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று அதிகாலையில் சூறாவளியுடன் பலத்த மழை பெய்தது.
இதில் ஏராளமான வாழைகள் முழுவதும் அடியோடு சாய்ந்து சேதமடைந்தன. வருவாய் துறை மற்றும் வேளாண்மை துறையினர் கணக்கெடுத்தனர். இழப்பீடு வழங்க வேண்டும் என அரசுக்கு வாழை விவசாயிகளுக்கு கோரிக்கை விடுத்தனர்.

