/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
தலைமறைவு தீயணைப்பு அலுவலர் மீது நடவடிக்கைக்கு பரிந்துரை
/
தலைமறைவு தீயணைப்பு அலுவலர் மீது நடவடிக்கைக்கு பரிந்துரை
தலைமறைவு தீயணைப்பு அலுவலர் மீது நடவடிக்கைக்கு பரிந்துரை
தலைமறைவு தீயணைப்பு அலுவலர் மீது நடவடிக்கைக்கு பரிந்துரை
ADDED : டிச 30, 2025 06:34 AM

திருநெல்வேலி: திருநெல்வேலி தீயணைப்புத்துறை துணை இயக்குனர் சவரணபாபுவை லஞ்ச ஒழிப்பு போலீசில் சிக்க வைக்க முயன்ற வழக்கில் விசாரணைக்கு ஆஜராகாமல் 20 நாட்களாக தலைமறைவாக உள்ள தீயணைப்பு அலுவலர் வீரராஜ் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க போலீசார் பரிந்துரை செய்துள்ளனர்.
துணை இயக்குனர் சரவணபாபுவை லஞ்ச ஒழிப்பு போலீசில் சிக்க வைக்க திட்டமிட்டு, அவரது அலுவலகத்தில் ரூ.2.50 லட்சம் பணம் வைத்து சதி செய்ததாக, தீயணைப்பு துறையைச் சேர்ந்த சிலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இச்சம்பவத்தில் தீயணைப்பு வீரர்கள் ஆனந்த், மூர்த்தி, முருகேஷ் மற்றும் பணத்தை வைத்த விஜய், அவருக்கு உதவிய முத்து சுடலை ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
முக்கிய குற்றவாளியான திருப்பூர் தீயணைப்பு அலுவலர் வீரராஜ் தற்போது தலைமறைவாக உள்ளார். அவரை விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை. மேலும் அவர் முன் ஜாமின் கோரி உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்காமல் தலைமறைவாக உள்ள வீரராஜ் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருநெல்வேலி மாநகர காவல் துறை சார்பில் தீயணைப்பு துறை உயரதிகாரிகளுக்கு பரிந்துரை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இத்தகவலை இவ்வழக்கை விசாரிக்கும் துணை கமிஷனர் வினோத் சாந்தாராம் தெரிவித்தார்.

