/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
ஆம்னி பஸ் கவிழ்ந்ததில் ஓய்வுபெற்ற ஆசிரியர் பலி
/
ஆம்னி பஸ் கவிழ்ந்ததில் ஓய்வுபெற்ற ஆசிரியர் பலி
ADDED : ஜன 09, 2025 06:57 AM

திருநெல்வேலி : நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் இருந்து நாகர்கோவிலுக்கு நேற்று முன்தினம் இரவு புறப்பட்ட, 'யுனிவர்சல் டிராவல்ஸ்' ஆம்னி பஸ் நேற்று காலை திருநெல்வேலி --- நாகர்கோவில் நான்கு வழிச்சாலையில் சென்றது. 6:00 மணிக்கு ஆயன்குளம் அருகே தனியார் நர்சிங் கல்லுாரி அருகே சென்றபோது, இடது புறம் சாலையில் பஸ் தலை குப்புற கவிழ்ந்ததில், பலர் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர்.
அந்த பஸ்சில் இருந்த 37 பயணியரில், 11 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
திருநெல்வேலி மாவட்டம் லெவிஞ்சிபுரத்தை சேர்ந்தவர் பிரிஸ்கோ, 64, ஓய்வுபெற்ற ஆசிரியர். இவர், மகள் குடும்பத்தினருடன் வேளாங்கண்ணிக்கு சென்று விட்டு திரும்பும் போது விபத்து நடந்தது. இதில், பிரிஸ்கோ இறந்தார்.
பஸ் டிரைவர் துாங்கியதால், விபத்து ஏற்பட்டிருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். டிரைவர் சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலை சேர்ந்த இளங்கோ மகன் சவுமிய நாராயணன், அங்கிருந்து தப்பினார்.

