/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
பெட்ரோல் பங்க் மேலாளரிடம் ரூ.33 லட்சம் கொள்ளை கொள்ளையர்கள் தவற விட்ட ரூ 3 லட்சம், அலைபேசி சிக்கியது
/
பெட்ரோல் பங்க் மேலாளரிடம் ரூ.33 லட்சம் கொள்ளை கொள்ளையர்கள் தவற விட்ட ரூ 3 லட்சம், அலைபேசி சிக்கியது
பெட்ரோல் பங்க் மேலாளரிடம் ரூ.33 லட்சம் கொள்ளை கொள்ளையர்கள் தவற விட்ட ரூ 3 லட்சம், அலைபேசி சிக்கியது
பெட்ரோல் பங்க் மேலாளரிடம் ரூ.33 லட்சம் கொள்ளை கொள்ளையர்கள் தவற விட்ட ரூ 3 லட்சம், அலைபேசி சிக்கியது
ADDED : மே 07, 2025 02:06 AM

திருநெல்வேலி:மகேந்திரகிரி இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையம் அருகே பெட்ரோல் பங்க் மேலாளரிடம் ரூ.33 லட்சம் பறித்து சென்ற மூன்று வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர். கொள்ளையர்கள் தவற விட்ட ரூ.3 லட்சம், அலைபேசியை ஆட்டோ டிரைவர் போலீசில் ஒப்படைத்தார்.
திருநெல்வேலி மாவட்டம் பணகுடி, புண்ணியவாளன்புரத்தில் தி.மு.க., அவைத்தலைவர் கிரகாம்பெல் குடும்பத்தினருக்கு சொந்தமான பெட்ரோல் பங்க் உள்ளது. அதில் வள்ளியூரை சேர்ந்த முருகன் 50, மேலாளராக உள்ளார். விற்பனை பணத்தை ஒரு கி.மீ., தொலைவில் இஸ்ரோ விண்வெளி மைய வளாகத்தில் உள்ள ஸ்டேட் வங்கியில் டெபாசிட் செய்வது வழக்கம்.
2 நாட்களுக்கான விற்பனை பணம் ரூ.36 லட்சத்து 6 ஆயிரத்தை நேற்று முன்தினம் காலை 11:00 மணிக்கு பையில் வைத்துக்கொண்டு நான்கு வழிச்சாலையில் மொபட்டில் சென்றார். அப்போது அணுகு சாலையில் அவருக்கு எதிரே டூவீலரில் வந்த 3 பேர் கும்பல், அவரது மொபட் மீது மோதுவது போல் நெருங்கினர். இதனால் அவர் வண்டியுடன் கீழே விழுந்தார். அவரது பணம் இருந்த பேக்கை அந்த கும்பல் எடுத்துக்கொண்டு தப்பியது.
தப்பிய 3 லட்சம்
அப்போது பேக்கில் இருந்து மூன்று லட்சம் ரூபாய் பணமும் கொள்ளையர்களில் ஒருவனது அலைபேசியும் கீழே விழுந்தன. ஆனால் அதிர்ச்சியில் இருந்த முருகன் மொபட்டை போட்டுவிட்டு கீழே விழுந்ததை கவனிக்காமல் பெட்ரோல் பங்கிற்கு ஓடினார். அவர் அளித்த புகாரின்பேரில் பணகுடி போலீசார் விசாரித்தனர்.
இதனிடையே கீழே கிடந்த பணம், அலைபேசியை அந்த வழியாக வந்த ஆட்டோ டிரைவர் முத்துகிருஷ்ணன் பார்த்துள்ளார். விபத்தில் யாரேனும் சிக்கி பணத்தை விட்டு சென்றுவிட்டார்களோ என நினைத்து அந்த பணத்தையும் அலைபேசியையும் பணகுடி போலீசில் ஒப்படைத்தார்.
அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. காமிராக்களை ஆய்வு செய்தபோது 3 பேர் கும்பல் காவல்கிணறு பகுதியை நோக்கி ஒரே மோட்டார் சைக்கிளில் சென்றது தெரியவந்தது.
சம்பவ இடத்தில் கிடந்த போன் நாங்குநேரியை சேர்ந்த கல்யாணி என்ற 19 வயது வாலிபருக்கு சொந்தமானது. சம்பவத்தில் ஈடுபட்ட மூன்று பேருமே 20 வயதுக்குட்ட வாலிபர்கள். அவர்களை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். இதில் ஒருவர் மதுரையைச் சேர்ந்தவர் ஆவார். அவர்களை கைது செய்ய 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
தேர்தல் நிதி வழிப்பறி:
திருநெல்வேலி மாவட்டம் நான்கு வழிச்சாலையில் நாங்குநேரி, வள்ளியூர், பணகுடி பகுதிகளில் லட்சக்கணக்கில் பணம் கொண்டு செல்பவர்களை தாக்கி பணம் பறிப்பது தொடர்ந்து நடக்கிறது. கடந்த பார்லிமென்ட் தேர்தலின் போது திருநெல்வேலி மாவட்ட தி.மு.க.,வில் இருந்து ராதாபுரம் தொகுதிக்கு தேர்தல் செலவுக்காக கொடுக்கப்பட்ட லட்சக்கணக்கான பணத்தை இவ்வாறு டூவீலரில் சென்ற கும்பல் கொள்ளையடித்தனர். தேர்தல் காலம் என்பதால் அதனை பறிமுதல் செய்த போலீசார் சிலரை கைது செய்தனர். ஆனால் அந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் 25 வயதுக்கு மேற்பட்டவர்கள்.
நேற்றைய சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் 20 வயதுக்கு உட்பட்டவர்கள். ஆனால் ஒரே மாதிரியாக இருப்பதால் இரு சம்பவங்களுக்கும் தொடர்பு இருக்கலாமா என போலீசார் விசாரிக்கின்றனர்.